செப்டம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
செப்டம்பர் 17 அன்று வாரணாசி சென்றடையும் பிரதமர், நரூர் கிராமத்திற்குச் சென்று, ‘ரூம்-டு-ரீட்’ என்ற தொண்டு நிறுவன உதவியுடன் இயங்கும் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார். பிறகு, டி.எல்.டபிள்யூ வளாகத்தில் காசி வித்யபீத் மாணவர்களுடனும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் குழந்தைகளுடனும் பிரதமர் கலந்துரையாடுவார்.
செப்டம்பர் 18ஆம் தேதி, பி.எச்.யு அரங்கிலிருந்து ரூ.500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும், துவக்க விழாவிலும் பிரதமர் கலந்து கொள்வார். புராணிகாசிக்கான ஒருங்கிணைந்த மின்சக்தி வளர்ச்சித் திட்டம் மற்றும் பி.எச்.யு-க்கான அடல் அடைகாக்கும் மையத்தைத் துவக்கி வைக்கும் பிரதமர், பி.எச்.யு-வில் மண்டல கண் மருத்துவ மையத்திற்கான அடிக்கல்லையும் நாட்டுவார். அதன்பிறகு, பிரதமர் மக்களிடையே கலந்துரையாடுவார்.


