குப்பைகள் இல்லா நகரங்களை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குக்கு ஏற்ற வகையில்
உயிரி இயற்கை எரிவாயு ஆலையில் ‘கழிவை பணமாக்கும் மற்றும் ‘சுழற்சி பொருளாதாரம்’ கொள்கைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
பிரிக்கப்பட்ட மட்கும் குப்பையை நாள் ஒன்றுக்கு 550 டன்கள் சுத்திகரிக்கும் திறன் உடையது இந்த ஆலை.
இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 17,000 கிலோ இயற்கை எரிவாயு மற்றும் 100 டன்கள் இயற்கை உரங்களை உற்பத்தி செய்யும் 

இந்தூரில் சாண எரிவாயு ஆலையை பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் நாளை (பிப்ரவரி 19ம் தேதி) தொடங்கி வைக்கிறார்.

‘‘குப்பைகள் இல்லா நகரங்களை’’  உருவாக்கும் தொலைநோக்கோடு, இரண்டாம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.  வள ஆதாரத்தை அதிகளவில் மீட்க, ‘‘கழிவை பணமாக்கும் மற்றும் ‘‘சுழற்சி பொருளாதாரம்’’ என்ற கொள்கைகளின் கீழ் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இது இந்தூர் உயிரி எரிவாயு ஆலையில் நிரூபணமாகியுள்ளது.

இந்த ஆலை, நாள் ஒன்றுக்கு 550 டன் பிரிக்கப்பட்ட மட்கும் குப்பைகளை சுத்திகரிக்கும்.  இந்த ஆலை, நாள் ஒன்றுக்கு சுமார் 17,000 கிலோ இயற்கை எரிவாயுவையும், 100 டன் இயற்கை உரத்தையும் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கழிவு முற்றிலும் வெளியேறாத வகையில் இந்த ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் பலவிதமான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பலன்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை குறைக்கும், இயற்கை உரத்தை வழங்குவதோடு, பசுமை எரிசக்தியையும் வழங்கும்.

இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக,  இந்தூர் நகராட்சி, இந்தூர் தூய்மை எரிசக்தி நிறுவனம், இந்தோ சுற்றுச்சூழல் ஒருங்கிணைந்த தீர்வுகள் நிறுவனம்(IEISL) உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பு மூலம்  உருவாக்கியது. இதற்கு ஐஇஐஎஸ்எல் நிறுவனம் ரூ.150 கோடியை 100 சதவீத முதலீடாக செய்துள்ளது.  இந்த ஆலை உற்பத்தி செய்யும் இயற்கை வாயுவில் குறைந்தது 50 சதவீதத்தை இந்தூர் நகராட்சி கொள்முதல் செய்யும். இந்த எரிவாயு நகர பேருந்துகளில் எரிபொருளாக பயன்படுத்தப்படும். இந்த நடவடிக்கை, முதல் முறையாக மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள எரிவாயு வெளிசந்தையில் விற்கப்படும். இந்த ஆலை உற்பத்தி செய்யும் இயற்கை உரம், விவசாயம் மற்றும் தோட்டக்கலை  பயன்பாட்டில் ரசாயான உரங்களுக்கு மாற்றாக பயன்படுத்த உதவும்.     

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
The quiet foundations for India’s next growth phase

Media Coverage

The quiet foundations for India’s next growth phase
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 30, 2025
December 30, 2025

PM Modi’s Decisive Leadership Transforming Reforms into Tangible Growth, Collective Strength & National Pride