பகிர்ந்து
 
Comments
உலக உயிரி எரிபொருள் தின நிகழ்ச்சியில் பிரதமர் உரை
உயிரி எரிபொருட்கள் அதிகரிப்பினால் விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கும் என்று பிரதமர் மோடி கூறுகிறார்
உயிரி எரிபொருட்கள் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கும் மற்றும் நாட்டிற்கு அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவும் என்று பிரதமர் மோடி கூறுகிறார்.
நாட்டின் எத்தனால் உற்பத்தி அடுத்த 4 ஆண்டுகளில் தற்போதைய நிலையைவிட 3 மடங்கு அதிகரித்து 450 கோடி லிட்டராக இருக்கும் என்றும், இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்குச் செலவிடும் தொலையில் ரூ.12,000 கோடி அளவுக்குச் சேமிக்க முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உயிரி எரிபொருட்கள் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கும் மற்றும் நாட்டிற்கு அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவும் என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

உலக உயிரி எரிபொருள் தினத்தை ஒட்டி புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், மாணவர்கள், அரசு அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில், உயிரி எரிபொருட்கள் இந்தியாவுக்கு புதிய ஊக்கத்தை அளிக்க முடியும் எனத் தெரிவித்தார். பயிர்களிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருள், கிராமங்கள், நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடியது என்று அவர் கூறினார்.

திரு அடல் பீஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது உயிரி எரிபொருளில் இருந்து எத்தனால் தயாரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு பின்னர், எத்தனால் கலப்புத்திட்டத்திற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. விவசாயிகளுக்கு இதன் மூலம் பயன் கிடைப்பதுடன், கடந்த ஆண்டில் ரூ.4,000 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணியை சேமிக்க முடிந்ததாக பிரதமர் தெரிவித்தார். அடுத்த 4 ஆண்டுகளில் இந்த இலக்கு ரூ.12,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உயிரிக்கழிவை உயிரி எரிபொருளாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு கணிசமான அளவுக்கு முதலீடு செய்துவருவதாக பிரதமர் தெரிவித்தார். 12 நவீன சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை இதன் மூலம் உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

ஜன்தன், வன்தன், கோபர்தன் ஆகிய திட்டங்கள் ஏழை, எளிய மக்கள், பழங்குடியினர், விவசாயிகள் ஆகியோரின் வாழ்க்கையை மாற்றியமைக்க பேருதவி புரிந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். உயிரி எரிபொருட்கள் ஆற்றலை உருவாக்கும் முயற்சி, மாணவர்கள்,ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், மக்கள் ஆகியோரின் பங்கேற்புடன் மட்டுமே நிறைவேற முடியும் என்று அவர் தெரிவித்தார். கிராமப்பகுதிகளுக்கு உயிரி எரிபொருளின் பயன்களை கொண்டுச் செல்ல அனைவரும் உதவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“உயிரி எரிபொருட்கள் குறித்த தேசிய கொள்கை 2018” என்னும் கையேட்டை பிரதமர் வெளியிட்டார். பரிவேஷ் என்னும் ஒற்றைச்சாளர மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

 

बायोफ्यूल सिर्फ विज्ञान नहीं है बल्कि वो मंत्र है जो 21वीं सदी के भारत को नई ऊर्जा देने वाला है

बायोफ्यूल यानि फसलों से निकला ईंधन, कूड़े-कचरे से निकला ईंधन

ये गांव से लेकर शहर तक के जीवन को बदलने वाला है

आम के आम, गुठली के दाम की जो पुरानी कहावत है, उसका ये आधुनिक रूप है: PM

— PMO India (@PMOIndia) August 10, 2018

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
Capital expenditure of States more than doubles to ₹1.71-lakh crore as of Q2

Media Coverage

Capital expenditure of States more than doubles to ₹1.71-lakh crore as of Q2
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM congratulates Himachal Pradesh CM for securing first place in country by administering second dose of covid vaccine
December 06, 2021
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has congratulated the Chief Minister of Himachal Pradesh for securing first place in the country by administering the second dose of covid vaccine to the targeted eligible citizens in Himachal Pradesh.

In response to a tweet by the Chief Minister of Himachal Pradesh, Shri Jairam Thakur, the Prime Minister said;

"बहुत-बहुत बधाई @jairamthakurbjp जी। कोविड के खिलाफ लड़ाई में हिमाचलवासियों ने पूरे देश के सामने एक अनुकरणीय उदाहरण पेश किया है। लोगों का यही जज्बा इस लड़ाई में न्यू इंडिया को नई ताकत देगा।"