உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடியின் முக்கிய முன்னேற்றங்கள்: திறமை, கொள்கை மற்றும் செயல்திறன் ஆகியவை ஆகும்
திவால் மற்றும் திவால்தன்மை காரணமாக இந்தியாவில் வணிகம் செய்வது சுலபம். வங்கி அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
அனைவருக்கும் மின்சாரம், எல்லோருக்கும் மின்சாரம், அனைவருக்கும் சுத்தமான எரிபொருள், அனைவருக்கும் ஆரோக்கியம், வங்கி மற்றும் அரசாங்கம் மற்ற திட்டங்களுக்கு எங்களது அரசுஉதவுவதாக பிரதமர் கூறுகிறார்.
#AyushmanBharat திட்டம் மருத்துவமனைகளை கட்டவும் மருத்துவ உள்கட்டமைப்புகளுக்கு பெரிதும் உதவுகிறது
உலகத்திற்காக இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் உள்ளது என்று அனைத்து முதலீட்டாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்

டெராடூனில் இன்று நடைபெற்ற டெஸ்டிநேஷன் உத்ராகண்ட் முதலீட்டாளர்கள் 2018 உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அதிவேகமான மாற்றம் ஏற்பட்டு வரும் காலத்தில் இந்தியா உள்ளது. வரும்காலங்களில் உலக வளர்ச்சியில் இந்திய முக்கிய பங்கு வகிக்கும் என்ற கருத்து பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உள்ளது என்று பிரதமர் கூறினார்.

இத்தகைய பின்னணியில், சுலபமாக தொழில் செய்யும் பட்டியலில், இந்தியா 42 இடங்கள் முன்னேறியுள்ளது என்று பிரதமர் கூறினார். வரி விதிப்பு முறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவர் பேசினார். வராக்கடன் மற்றும் திவால் சட்டம் தொழில் செய்வதை சுலபமாக்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் சுதந்திரத்துக்குப் பிறகு செய்யப்பட்டுள்ள பெரிய வரி மாற்றம் ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகும்; இது நாட்டை ஒற்றை சந்தையாக மாற்றி, வரிசெலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

உள்கட்டமைப்பு துறை வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறிய பிரதமர், விரைவாக நடைபெற்று வரும் சாலை அமைப்பு, ரயில்வே தடங்கள், புதிய மெட்ரோ கட்டமைப்பு, அதிவேக ரயில் திட்டங்கள் மற்றும் பிரத்யேக சரக்கு மார்க்கங்கள் கட்டுமானம் குறித்து பேசினார். 

விமான போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர், மக்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதி திட்டம், மின்சாரம், தூய்மையான எரிசக்தி, சுகாதாரம் மற்றும் வங்கி சேவைகள் குறித்தும் பேசினார். சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டம் 2 மற்றும் 3 அடுக்கு நகரங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்கும் என்றார்.

புதிய இந்தியா முதலீடுக்கான சிறந்த இலக்காகும், இதனைக் குறிக்கும் வகையில் “டெஸ்டிநேஷன் உத்ராகண்ட்” உள்ளது என்று கூறிய பிரதமர், மாநிலத்தில் முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் எடுக்கப்பட்ட உள்ள நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். அனைத்து வானிலைகளுக்கும் உகந்த சார்-தம் சாலைத் திட்டம், ரிஷிகேஷ் – கர்ணபிரயாக் ரயில்வே திட்டம் போன்ற நிலத்தை இணைக்கும், போக்குவரத்தை மேம்படுத்தும், முன்முயற்சிகளின் வளர்ச்சி குறித்து பிரதமர் கூறினார். சுற்றுலாத் துறையில் உத்ராகண்ட் மாநிலம் கொண்டுள்ள மிகப் பெரிய வாய்ப்புகள் குறித்தும் அவர் கூறினார்.

உணவு பதப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறையில் எடுக்கப்பட்டு வரும் முன்முயற்சிகள் குறித்து பேசிய பிரதமர் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்தின் சாதனைகளையும் எடுத்துரைத்தார்.

Click here to read full text speech

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Made in India Netra, Pinaka Systems attract European, Southeast Asian interest

Media Coverage

Made in India Netra, Pinaka Systems attract European, Southeast Asian interest
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 20, 2024
June 20, 2024

Modi Government's Policy Initiatives Driving Progress and Development Across Diverse Sectors