புத்த ஜெயந்தியையொட்டி, புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், சங்க தானம் படைத்து (Sangh Dana) பிரதமர் பிரார்த்தனை செய்தார். மேலும், சாரனாத்தில் உள்ள திபெத்திய உயர்நிலைக் கல்விக்கான மத்திய கல்வி நிறுவனம் மற்றும் புத்தகயாவில் உள்ள அனைத்து இந்திய புத்த பிக்குகள் சங்கம் ஆகியவற்றை கவுரவிக்கும் வகையில், வைசாக் பாராட்டு பத்திரங்களை பிரதமர் வழங்கினார்.

அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், தனிப்பட்ட பாரம்பரியத்தை கொண்ட நாடாக இந்தியா இருப்பதாக தெரிவித்தார். இங்கு மிதமிஞ்சிய சிந்தனைகள், மனிதசமூகத்துக்கு எப்போதும் பயனளிப்பதாக அவர் தெரிவித்தார். புத்தரின் போதனைகள், பல்வேறு நாடுகளையும் வடிவமைத்துள்ளதாக அவர் கூறினார். இந்தியா எப்போதுமே சண்டையிடும் நாடாக இருந்ததில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

புத்தர் அளித்துள்ள 8 வழிமுறைகளை குறிப்பிட்ட பிரதமர், இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், நாம் தற்போது எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

அன்பு மற்றும் இரக்கம் குறித்து புத்தர் அளித்த செய்தி, இன்று உலகத்துக்கு மிகப்பெரும் அளவில் பயனளிப்பதாக பிரதமர் கூறினார். எனவே, புத்தரை நம்பும் அனைவரும், இந்த பொது நலனுக்காக தங்களது பலத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

புத்தர் காட்டிய வழியில் மக்களுக்கு சேவையாற்றும் வகையில், அரசு பணியாற்றி வருவதாக திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும் அவர், புத்தருடன் தொடர்புடைய பாரம்பரியம் உள்ளிட்ட இந்திய கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்ற விரிவான இலக்குடன் மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும் கூறினார். புத்த வளாகங்களுக்காக ரூ. 360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் 2022-ம் ஆண்டில் புதிய இந்தியாவை படைப்பதற்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பொதுமக்களை அவர் அறிவுறுத்தினார். அந்த நாளில் நிறைவேற்றுவதற்கான இலக்குகளை ஒவ்வொருவரும் அடையாளம் காண வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

 

Click here to read PM's speech

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
PM Modi holds 'productive' exchanges with G7 leaders on key global issues

Media Coverage

PM Modi holds 'productive' exchanges with G7 leaders on key global issues
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 18, 2025
June 18, 2025

Citizens Appreciate PM Modi’s Reforms Driving Economic Surge