'வசுதைவ குடும்பகம்' என்ற இந்த இரண்டு சொற்களும் ஆழமான தத்துவத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. 'உலகம் ஒரே குடும்பம்' என்பது இதன் பொருளாகும். இது, எல்லைகள், மொழிகள் மற்றும் சித்தாந்தங்களைக் கடந்து, ஒரு உலகளாவிய குடும்பமாக முன்னேற நம்மை ஊக்குவிக்கும் அனைத்தையும் தழுவிய கண்ணோட்டமாகும். இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் போது, இது மனிதகுலத்தை மையமாகக் கொண்ட முன்னேற்றத்திற்கான அழைப்பாக மாறியுள்ளது. ஒரே பூமியாக, நமது கிரகத்தை மேம்படுத்த நாம் ஒன்றிணைகிறோம். ஒரே குடும்பமாக, வளர்ச்சியைத் தேடுவதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கிறோம். ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்தை நோக்கி நாம் ஒன்றாக நகர்கிறோம் - ஒரே எதிர்காலம் என்பது இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தருணத்தில் மறுக்க முடியாத உண்மையாகும்.

பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலக நிலை அதற்கு முந்தைய உலகத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. இதில் மூன்று முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

முதலாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட உலகைப் பற்றிய கண்ணோட்டத்திலிருந்து, மனிதகுலத்தை மையமாகக் கொண்ட கண்ணோட்டத்திற்கு மாறுவது அவசியம் என்ற உணர்வு வளர்ந்து வருகிறது.

இரண்டாவதாக, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் மீள்தன்மை மற்றும் நம்பகத்தன்மையின் முக்கியத்துவத்தை உலகம் அங்கீகரித்துள்ளது.

மூன்றாவதாக, உலகளாவிய நிறுவனங்களை சீர்திருத்துவதன் மூலம் பன்முகத்தன்மையை அதிகரிப்பதற்கான கூட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களில் நமது ஜி20 தலைமைத்துவம் ஒரு வினையூக்கியின் பங்கைக் கொண்டுள்ளது.

2022 டிசம்பரில், இந்தோனேசியாவில் இருந்து நாம் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, ஜி20 அமைப்பால் ஒரு மனநிலை மாற்றம் தூண்டப்பட வேண்டும் என்று நான் எழுதியிருந்தேன். வளரும் நாடுகள், உலகளாவிய தெற்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் விளிம்புநிலை விருப்பங்களை முதன்மைப்படுத்தும் சூழலில் இது முக்கியமாகத் தேவைப்பட்டது.

125 நாடுகளைச் சேர்ந்த உலகளாவிய தெற்கின் குரல் என்னும் உச்சிமாநாடு, நமது தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதன்மையான முன்முயற்சிகளில் ஒன்றாகும். உலகளாவிய தெற்கிலிருந்து உள்ளீடுகளையும், யோசனைகளையும் சேகரிப்பதற்கான ஒரு முக்கியமான பயிற்சியாக இது இருந்தது. மேலும், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பங்களிப்பை நமது தலைமைத்துவம் கண்டதோடு மட்டுமல்லாமல், ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20-யின் நிரந்தர உறுப்பினராக சேர்க்கவும் வலியுறுத்தியுள்ளது

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகம் என்பது களங்களில் உள்ள நமது சவால்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதாகும். இது 2030 இலக்கின் நடுப்பகுதியாகும், மேலும் நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம் தடம் புரண்டுள்ளது என்று பலர் மிகுந்த கவலையுடன் குறிப்பிடுகின்றனர். நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஜி-20 2023 செயல் திட்டம் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதை நோக்கிய ஜி-20 இன் எதிர்கால திசையை வழிநடத்தும்.

இந்தியாவில் பண்டைக்காலத்தில் இருந்தே இயற்கையுடன் இயைந்து வாழ்வது ஒரு நடைமுறையாக உள்ளது. நவீன காலத்திலும் கூட, பருவ நிலை செயல் திட்டத்திற்கு நமது பங்களிப்பை நாம் செய்து வருகிறோம்.

வளரும் நாடுகளில் பல வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் உள்ளன. இவை பருவ நிலை செயல்திட்டத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். பருவ நிலை செயல்திட்டத்திற்கான விருப்பங்களை நிறைவேற்ற பருவநிலை நிதி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் இருக்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எதை செய்யக்கூடாது என்பதில் கடுமையாக இருப்பதைவிட, எதை செய்ய வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான அணுகு முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்பதை நாங்கள் நம்புகிறோம்.

நீடிக்கவல்ல உறுதியான நீலப் பொருளாதாரத்திற்கு ஏற்ப நமது கடல்களின் தூய்மைத் தன்மையை பராமரிப்பதில் சென்னை உயர்நிலைக் கோட்பாடுகள் கவனம் செலுத்துகின்றன.

பசுமை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையத்துடன் நமது தலைமைத்துவத்தில் இருந்து, தூய்மையான பசுமை ஹைட்ரஜனுக்கான உலகளாவிய சூழல் அமைப்பு உருவாகும்.

2015-ல், நாம் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியைத் தொடங்கினோம். தற்போது உலகளாவிய உயிரி எரிபொருள்கள் கூட்டணி மூலம், சுழற்சிப் பொருளாதாரப் பயன்களுடன் உலக எரிசக்தி மாற்றத்திற்கு உலகளவில் நாம் ஆதரவாக இருப்போம்.

பருவ நிலை செயல்திட்டத்தை ஜனநாயப்படுத்துவது இந்த இயக்கத்திற்கு உத்வேகம் அளிப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். தனிநபர்கள் தங்களின் நீண்ட கால ஆரோக்கியத்தின் அடிப்படையில் அன்றாட முடிவுகளை மேற்கொள்வது போல, இந்தப் புவிக் கோளின் ஆரோக்கிய அடிப்படையில் அவர்கள் வாழ்க்கை முறை முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். உடல் நலத்திற்கு உலகளாவிய மக்கள் திரள் இயக்கமாக யோகா மாறியிருப்பது போல், நீடிக்கவல்ல சூற்றுச்சூழலுக்கான வாழ்க்கை (லைஃப்) முறையுடனும் உலகத்தை நாம் உத்வேகப்படுத்தி வருகிறோம்.

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக உணவுப் மற்றும் சத்துணவு பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானதாக இருக்கும். இதற்கு சிறுதானியங்கள் அல்லது ஸ்ரீ அன்னா உதவியாக இருப்பதோடு பருவநிலைக்கு உகந்த வேளாண்மையையும் ஊக்கப்படுத்தும். சிறுதானியங்களின் சர்வதேச ஆண்டில் சிறுதானியங்களை நாம் உலகளாவிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளோம். இந்த இசை வடிவில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த உயர் நிலைக் கோட்பாடுகள் உதவிகரமாக உள்ளன.

தொழில்நுட்பம் மாற்றத்திற்கானதாக மட்டுமின்றி, அனைவரையும் உள்படுத்துவதற்கான தேவையாகவும் இருக்கிறது. கடந்த காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சமமான பயனை அளிக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலையை அதிகப்படுத்துவதற்கு மாறாக, தொழில்நுட்பம் சமத்துவமின்மையை எவ்வாறு குறைக்கும் என்பதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.

உதாரணமாக, உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் வங்கிக் கணக்கு பெற்றிடாத நிலையில் அல்லது டிஜிட்டல் அடையாளங்கள் இல்லாத நிலையில், இந்தியாவில் டிஜிட்டலுக்கான பொதுக் கட்டமைப்பு மூலம் பொருளாதார ரீதியாக அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜி20 மூலம் அனைவரையும் உட்படுத்திய வளர்ச்சியின் அதிகாரத்தை அளிப்பதற்கு டிபிஐ முறையை வளரும் நாடுகளுக்கு நாம் வழங்கி உதவலாம்.

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரம் என்பது தற்செயலானது அல்ல. நமது எளிய, அதிகப்படியான, நீடிக்கவல்ல தீர்வுகள் சாமானிய மக்களுக்கு அதிகாரத்தை அளித்துள்ளன. நமது வளர்ச்சிக்கு நலிவடைந்த பிரிவு மக்கள் தலைமை தாங்குகிறார்கள். விண்வெளியில் இருந்து விளையாட்டுகள் வரை, பொருளாதாரத்தில் இருந்து தொழில் முனைவு வரை, இந்தியப் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கிறார்கள். பெண்களின் மேம்பாடு என்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான மேம்பாடு என்பதற்கு மாறியிருக்கின்றனர். பாலின ரீதியிலான டிஜிட்டல் பாகுபாடுகளைக் குறைப்பதற்கும் தலைமைத்துவத்திலும் முடிவுகள் எடுப்பதிலும் பெண்களுக்கான பங்கினை அதிகரிப்பதற்கும் நமது ஜி20 தலைமைத்துவம் பாடுபட்டு வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஜி20 தலைமைத்துவம் என்பது வெறும் உயர்நிலை ராஜ்ஜிய பதவி அல்ல. ஐனநாயகத்தின் அன்னை பன்முகத்தன்மையின் முன்மாதிரி என்ற நிலையில், இந்த அனுபவத்தின் கதவுகளை உலகத்திற்கு நாம் திறந்து வைத்துள்ளோம்.

இன்று அதிகளவிலான பொருட்களின் தரம் என்பது இந்தியாவோடு இணைந்ததாக இருக்கிறது. ஜி20 தலைமைத்துவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இது மக்கள் பங்கேற்புள்ள இயக்கமாக மாறியிருக்கிறது. நமது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 60 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நமது தலைமைப் பொறுப்பு நிறைவடையும் காலத்திற்குள் நடத்தப்பட்ட கூட்டங்களில் 125 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். எந்தவொரு தலைமைத்துவமும் இவ்வளவு பெரிய அளவில், பலதரப்பட்ட புவியியல் சூழலில் கூட்டங்களை நடத்தியதில்லை.

இந்தியாவின் மக்கள் தொகை, ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் வளர்ச்சி குறித்து பலரும் பேசுவதைக் கேட்கமுடிகிறது. இவற்றை முதன் முறையாக அவர்கள் பேசுவது முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கிறது. நமது ஜி20 பிரதிநிதிகள் இதற்கு சான்று என நான் உறுதியாக நம்புகிறேன்.

நமது ஜி20 தலைமைத்துவம் பாகுபாடுகளை இணைக்கவும், தடைகளை உடைக்கவும் பாடுபட்டுள்ளது. முரண்பாடுகளை நீக்கி ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில், ஒத்துழைப்புக்கான விதைகளை நாம் விதைத்துள்ளோம். அனைவரின் குரலைக் கேட்பதையும், அனைத்து நாடுகளும் பங்களிப்பு செய்வதையும் உறுதிப்படுத்த ஜி20 தலைமைத்துவம் என்ற முறையில் உலகளாவிய பங்கேற்பை அதிகப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். செயல்பாடுகள் மற்றும் விளைவுகள் வழியாக நமது உறுதிமொழியை நாம் இணைத்திருப்பதாக நான் நம்புகிறேன்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Budget 2026 aims to build job-ready, formal talent base, say experts

Media Coverage

Budget 2026 aims to build job-ready, formal talent base, say experts
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
காசி-தமிழ் சங்கமம் மற்றும் 'ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்'-திற்கு (ஒரு பாரதம், வலுவான பாரதம்) அஞ்சலி
January 15, 2026

1026-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோம்நாத் மீதான முதல் தாக்குதலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சோம்நாத் சுயமரியாதை விழாவில் பங்கேற்க நான் புனித பூமியான சோம்நாத் சென்றிருந்தேன். வரலாறு, கலாச்சாரம், இந்திய மக்களின் நீடித்த மனவுணர்வு ஆகியவற்றின் மீது பகிரப்பட்ட மரியாதையால் ஒன்றுகூடிய இந்த நினைவு நிகழ்வில் இந்தியா முழுவதிலுமிருந்து மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தின் போது சோம்நாத்துக்கு வந்திருந்த சிலரையும், காசி-தமிழ் சங்கமத்தின் போது காசிக்கு வந்திருந்த சிலரையும் நான் சந்தித்தேன். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் அளித்த பாராட்டு வார்த்தைகள் என்னை நெகிழச்செய்தன. எனவே, இந்த விஷயத்தில் சில எண்ணங்களை நான் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

தமிழ் கற்காமல் இருப்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தம் என்று மனதின் குரல் நிகழ்ச்சியின் போது நான் கூறியிருந்தேன். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில ஆண்டுகளில், இந்தியா முழுவதும் தமிழ்க் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்தவும், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஆழப்படுத்தவும் எங்கள் அரசுக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அத்தகைய முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணம் காசி-தமிழ் சங்கமம். நமது பண்பாட்டில், சங்கம் அல்லது சங்கமம் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. இந்த வெளிச்சத்தில் பார்க்கும்போது, காசி-தமிழ் சங்கமம் உண்மையில் தனித்துவ முயற்சியாக விளங்குகிறது. இது இந்தியாவின் பல மரபுகளில் வாழும் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது. அதே நேரத்தில் அவற்றின் தனித்துவ அடையாளங்களை மதிக்கிறது.

அத்தகைய சங்கமத்தை நடத்துவதற்குக் காசியை விட சிறந்த இடம் எதுவாக இருக்க முடியும்? பழங்காலத்திலிருந்தே நாகரிகத்தின் நங்கூரமாகத் திகழ்ந்து வரும் அதே காசிக்கு... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் அறிவையும், வாழ்க்கை அனுபவத்தையும், மோட்சத்தையும் தேடி வந்துள்ளனர்.

தமிழ் மக்களுடனும் கலாச்சாரத்துடனும் காசியின் தொடர்பு மிகவும் ஆழமானது. காசியில் உறைந்துள்ள பகவான் விஸ்வநாதர் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உறைகிறார். தமிழ்நாட்டில் உள்ள தென்காசி, தெற்கின் காசி அல்லது தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது. துறவி குமரகுருபர சுவாமிகள் தனது ஆன்மீகம், புலமை மற்றும் நிறுவனக் கட்டுமானம் மூலம் காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நீடித்த தொடர்பை உருவாக்கினார். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த புதல்வர்களில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதி, காசியில் அறிவுசார் வளர்ச்சி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வுக்கான இடத்தைக் கண்டார். அவரது தேசியவாதம் ஆழமாகி, அவரது கவிதை கூர்மையானது. சுதந்திரமான, ஒன்றுபட்ட இந்தியா பற்றிய அவரது பார்வை தெளிவான வடிவம் பெற்றது இங்குதான். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் நெருக்கமான பிணைப்பை எடுத்துக்காட்டும் இதுபோன்ற பல நிகழ்வுகள் உள்ளன.

காசி-தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்வு 2022-ல் நடைபெற்றது. தொடக்க விழாவில் கலந்து கொண்டதை நான் நினைத்துப்பார்க்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து அறிஞர்கள், கைவினைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு பயணம் செய்தனர்.

அடுத்தடுத்த நிகழ்வுகள் இந்த முயற்சியின் அளவையும் ஆழத்தையும் விரிவுபடுத்தின. புதிய கருப்பொருள்கள், புதுமையான வடிவங்கள் மற்றும் ஆழமான ஈடுபாட்டை அறிமுகம் செய்வதே இதன் நோக்கமாக இருந்தது. சங்கமம், அதன் முக்கிய உணர்வில் வேரூன்றி தொடர்ந்து மேம்படுவதை இது உறுதி செய்தது. 2023-ம் ஆண்டின் இரண்டாவது நிகழ்வில், மக்களுக்கு மொழி ஒரு தடையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. மூன்றாவது நிகழ்வில், இந்திய அறிவுமுறைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில், கல்வி சார்ந்த விவாதங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அதிக அளவிலான பங்கேற்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கின. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது ஆண்டு நிகழ்வுகள் 2025 டிசம்பர் 2 அன்று தொடங்கியது. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள் மிகவும் சுவாரஸ்யமானது. தமிழ் கற்கலாம் என்ற அந்த கருப்பொருள் காசியிலும் அருகில் உள்ள பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அழகான தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டிலிருந்து ஆசிரியர்கள் காசிக்கு வந்தனர். காசியைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற்றனர்! இந்த முறை பல சிறப்பு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தொல்காப்பியம், 4 இந்திய மொழிகளிலும் 6 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

தென்காசியில் இருந்து காசிக்கு ஒரு தனித்துவமான நிகழ்வாக அகத்திய முனிவர் வாகனப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. வழியில், கண் மருத்துவ முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு முகாம்கள், டிஜிட்டல் எழுத்தறிவு முகாம்கள் போன்ற பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டன. கலாச்சார ஒற்றுமையின் செய்தியைப் பரப்பிய பாண்டிய மன்னர் அதி வீர பராக்கிரம பாண்டியனுக்கு இந்தப் பேரணி அஞ்சலி செலுத்தியது. நமோ படித்துறையில் கண்காட்சிகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கல்வி அமர்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற்றன.

காசி தமிழ் சங்கமத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களில் ஒன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பதாகும். நமது வேர்களுடன் தங்கள் தொடர்பை ஆழப்படுத்த வேண்டும் என்ற நமது இளைஞர் சக்தியின் ஆர்வத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இதில் நடைபெற்ற பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளின் போது தங்கள் திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த இது ஒரு சிறந்த தளமாகவும் அமைந்தது.

காசி தமிழ் சங்கமத்தின்போது மேற்கொண்ட காசி பயணத்தை மறக்கமுடியாத சிறப்பான பயணமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து உத்தரபிரதேசத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கியது. பல ரயில் நிலையங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில், அவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். ரயில் பயணத்தில் மெல்லிசைப் பாடல்கள் ஒலிக்கச் செய்ததுடன், உரையாடல்களும் நடைபெற்றன.

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்றவர்களுக்குக் காட்டப்பட்ட அரவணைப்புக்காகவும் சிறந்த விருந்தோம்பலுக்காகவும் காசியையும் உத்தரபிரதேசத்தையும் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளைப் நான் பாராட்ட விரும்புகிறேன். தமிழ்நாட்டிலிருந்து வந்த விருந்தினர்களுக்காக பலர் தங்கள் வீடுகளின் கதவுகளைத் திறந்து வரவேற்றனர். விருந்தினர்கள் தடையற்ற சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய உள்ளூர் நிர்வாகம் 24 மணி நேரமும் உழைத்தது. வாரணாசி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான நான் இதில் பெருமைப்படாமல் இருக்க முடியாது!

இந்த முறை, காசி-தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அதில் குடியரசுத் துணைத்தலைவரும் தமிழ்நாட்டின் பெருமைமிகு மைந்தருமான திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்தியாவின் ஆன்மீக மகத்துவத்தையும், தேசிய ஒருங்கிணைப்பையும் இத்தகைய தளங்கள் எவ்வாறு ஆழப்படுத்துகின்றன என்பதை எடுத்துரைத்து, மிகவும் ஊக்கமளிக்கும் உரையை அவர் நிகழ்த்தினார்.

காசி - தமிழ் சங்கமம் கலாச்சார புரிதலை வலுப்படுத்தி, மக்களிடையே பரிமாற்றங்களை வளர்க்கிறது. அத்துடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே நிலையான பிணைப்புகளை உருவாக்கி ஆரோக்கியமான விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. வரும் காலங்களில், இதை இன்னும் துடிப்பானதாக மாற்ற விரும்புகிறோம். மிக முக்கியமாக, இது 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுவாக வளர்த்துள்ளது. இந்த உணர்வு பல நூற்றாண்டுகளாக நமது பண்டிகைகள், இலக்கியம், இசை, கலை, உணவு வகைகள், கட்டடக்கலை, அறிவுசார் அமைப்புகள் என பலவற்றின் மூலம் செழித்து வளர்ந்துள்ளது.

இந்த ஆண்டு இந்தக் காலகட்டம் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் புனிதமான பண்டிகைக் காலமாகும். சூரியன், இயற்கை, விவசாயம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சங்கராந்தி, உத்தராயண், பொங்கல், மஹா பிஹு போன்ற பல்வேறு பண்டிகைகளை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகைகள் மக்களை ஒருங்கிணைத்து, நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்துகின்றன. இந்தப் பண்டிகைகளையொட்டி மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பண்டிகைகள், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தையும், கூட்டுப் பங்கேற்பையும், தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்தி, தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.