பகிர்ந்து
 
Comments

இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு மானியம் அளிப்பதன் மூலம், மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் உலகளாவிய டெண்டர்களில், இந்திய சரக்கு கப்பல்கள் பங்கேற்பதை அதிகரிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளது.

தற்சார்பு இந்தியா நோக்கை அடைவதற்காக, இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் ரூ.1624 கோடி மானியம் வழங்கும் திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் மத்திய அரசின் சரக்கு இறக்குமதிக்காக, மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் டெண்டர்களில் இந்திய கப்பல் நிறுவனங்கள் பங்கேற்க முடியும். இதன் மூலம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

2021 பிப்ரவரி 1ம் தேதிக்குப்பின் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இந்திய கொடியுடன் செல்லும் கப்பல், இந்தியாவில் பதிவு செய்த தேதியில் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட கப்பலாக இருந்தால், அதற்கான மானிய உதவி, வெளிநாட்டு கப்பல் நிறுவனம் தெரிவிக்கும் விலையில் 15 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படும் அல்லது இந்திய கப்பல் நிறுவனம் தெரிவிக்கும் விலைக்கும், வெளிநாட்டு கப்பல் நிறுவனம் தெரிவிக்கும் விலையின் மாறுபாட்டில் எது குறைவோ அது வழங்கப்படும்.

2021 பிப்ரவரி 1ம் தேதிக்குப்பின் இந்தியாவில் பதிவு செய்யப்படும் கப்பல் 10 முதல் 20 ஆண்டு பழமையானதாக இருந்தால், மானிய உதவி 10 சதவீதம் அளிக்கப்படும்.

இந்த மானிய உதவி ஒவ்வொரு ஆண்டும் ஒரு சதவீதம் குறைக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கும் 10 சதவீதம் வரையும், 10 முதல் 20 ஆண்டுகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கு 5 சதவீதம் வரையும் குறைக்கப்படும்.

இந்தியாவில் ஏற்கனவே பதிவு செய்த கப்பல்கள், 2021ம் பிப்ரவரி 1ம் தேதி நிலவரப்படி 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட கப்பலாக இருந்தால், வெளிநாட்டு கப்பல் நிறுவனம் தெரிவிக்கும் விலையில் 10 சதவீதம் மானியம் வழங்கப்படும் அல்லது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களின் விலை மாறுபாட்டில் எது குறைவோ அது வழங்கப்படும். ஏற்கனவே இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள்  10 முதல் 20 ஆண்டுகள் பழமையானதாக இருந்தால், 5 சதவீத மானிய உதவி அல்லது விலை மாறுபாட்டில் எது குறைவோ அது வழங்கப்படும்.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலை வெளிநாட்டு நிறுவனம் ஏலம் எடுத்திருந்தால், இந்த மானிய உதவி கிடைக்காது.

இந்த மானிய உதவி, அரசு அமைச்சகம் மற்றும் துறையிடம் நேரடியாக வழங்கப்படும்.

20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சரக்கு கப்பல்கள் மானிய உதவி பெற தகுதியில்லை.

பயன்கள்:

a) இந்திய வர்த்தக கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்திய மாலுமிகளுக்கு சிறந்த பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உலகளாவிய கப்பல் போக்குவரத்தில், இந்திய நிறுவனங்களின் பங்கு அதிகரிக்கும்.

b) கடல்சார் படிப்புகளை படிப்பவர்கள், கப்பலில் பயிற்சி பெற முடியும். இந்திய மாணவர்களுக்கு இந்திய கப்பல்கள் பயிற்சி அளிக்க முடியும்.

c) உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் இந்திய மாலுமிகளின் பங்கு அதிகரிக்கும்.

d) கப்பல் கட்டுதல் மற்றும் பழுது பார்க்கும் நிறுவனங்கள் போன்றவை அதிகரித்து நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கும்.

 

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Indian startups raise $10 billion in a quarter for the first time, report says

Media Coverage

Indian startups raise $10 billion in a quarter for the first time, report says
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM expresses grief over the loss of lives due to heavy rainfall in parts of Uttarakhand
October 19, 2021
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has expressed grief over the loss of lives due to heavy rainfall in parts of Uttarakhand.

In a tweet, the Prime Minister said;

"I am anguished by the loss of lives due to heavy rainfall in parts of Uttarakhand. May the injured recover soon. Rescue operations are underway to help those affected. I pray for everyone’s safety and well-being."