இந்திய பெண்களின் சாதனைகளைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, மகளிர் சக்தியின் தன்னம்பிக்கையின் பலனாக இந்த சாதனைகள் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அமிர்த காலத்தில் நாட்டின் உறுதிப்பாடுகளை நிறைவேற்றும் நம்பிக்கையை இந்த சாதனைகள் நமக்கு வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
வந்தே பாரத் விரைவு ரயிலின் முதல் பெண் ஓட்டுநர் திருமதி சுரேகா யாதவ் பற்றி மத்திய அமைச்சர் திரு ராவ்சாஹிப் பாட்டில் தான்வே வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் பதிலளித்துள்ளதாவது:
“புதிய இந்தியாவின் மகளிர் சக்தியின் நம்பிக்கை, இதுதான்! இன்று, ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தடம் பதித்து, சாதனை புரிந்திருப்பது, அமிர்த காலத்தில் நாட்டின் உறுதிப்பாடுகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.”
यह नए भारत की नारीशक्ति का आत्मविश्वास है! जीवन के हर क्षेत्र में आज महिलाएं जिन उपलब्धियों को अपने नाम दर्ज करा रही हैं, वो अमृतकाल में देश के संकल्पों के साकार होने का विश्वास दिलाती हैं। https://t.co/cyFvpubnsl
— Narendra Modi (@narendramodi) March 15, 2023


