Published By : Admin |
August 14, 2024 | 09:51 IST
Share
நாட்டுப் பிரிவினையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். பிரிவினை கொரடூரங்களின் நினைவு தினத்தை குறிக்கும் வகையில், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரிவினை எண்ணற்ற மக்களுக்கு ஏற்படுத்திய கடுமையான தாக்கம் மற்றும் துன்பங்களை திரு மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
நாட்டில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்புகளைப் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்ட மக்களின் உறுதிப்பாட்டை திரு மோடி பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"#PartitionHorrorsRemembranceDay நாளில், பிரிவினையின் கொடூரங்களால் ஏற்பட்ட தாக்கத்தை எதிர் கொண்டு மிகவும் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களை நாம் நினைவு கூர்கிறோம். மனித எழுச்சியின் சக்தியை விளக்கும் அவர்களின் துணிச்சலுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் இது உள்ளது. பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையில் மீண்டு வந்து மகத்தான வெற்றியை அடைந்தனர். இன்று, நமது தேசத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்புகளை எப்போதும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறோம்.
On #PartitionHorrorsRemembranceDay, we recall the countless people who were impacted and greatly suffered due to the horrors of Partition. It is also a day to pay tributes to their courage, which illustrates the power of human resilience. A lot of those impacted by Partition went…
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய சிவில் விருது
December 18, 2025
Share
பிரதமர் நரேந்திர மோடிக்கு பல நாடுகளால் மிக உயரிய சிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரிப்பதன் பிரதிபலிப்பாக இவை இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளையும் இது பிரதிபலிக்கிறது
கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருதுகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை நாம் காண்போம்.
நாடுகளால் வழங்கப்பட்ட விருதுகள்:
1. 2016, ஏப்ரலில் சௌதி அரேபியாவுக்கான அவரது பயணத்தின் போது, சௌதி அரேபியாவின் மிக உயரிய சிவில் விருது - மன்னர் அப்துல்லாசிஸ் சாஷ். பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. கௌரவமிக்க இந்த விருது மன்னர் சல்மான்வின் அப்துலாசிஸ் அவர்களால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.
2. அதே ஆண்டில் ஆப்கானிஸ்தானின் மிக உயரிய சிவில் விருதான ஸ்டேட் ஆர்டர் ஆஃப் காஸி அமீர் அமானுல்லா கான் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
3. 2018- ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டபோது தி கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
4. 2019-ல், ஆர்டர் ஆஃப் சையது விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவில் விருதாகும்.
5. 2019-ல் ரஷ்யாவின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரு விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
6. வெளிநாட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் மிக உயரிய கௌரவமான ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குயிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இஸ்ஸூதின் விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
7. 2019-ல் கௌரவமிக்க மன்னர் ஹமாத் ஆர்டர் ஆஃப் தி ரினைசான்ஸ்விருதினை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். இந்த விருதினை பஹ்ரைன் வழங்கியது.
8. ஒப்பற்ற சேவைகள் மற்றும் சாதனைகள் செய்தவர்களுக்கு அமெரிக்க ராணுவத்தின் விருதான லெஜியன் ஆஃப் மெரிட் அமெரிக்க அரசால் 2020-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
9. பூடானின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் ஜியால்போ விருது 2021 டிசம்பரில் பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மிக உயரிய சிவில் விருதுகளுக்கு அப்பால் உலகம் முழுவதும் உள்ள கௌரவமிக்க அமைப்புகளால் பல விருதுகளும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளன.
1. சியோல் அமைதிப் பரிசு: மனித குலத்தின் நல்லிணக்கம், நாடுகளுக்கிடையே சமரசம் செய்தல், உலக சமாதானம் ஆகியவற்றுக்கு பங்களிப்பு செய்ததன் மூலம் சிறப்பு பெறும் தனி நபர்களுக்கு சியோல் அமைதிப் பரிசு, கலாச்சார அறக்கட்டளையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. கௌரவமிக்க இந்த விருது 2018-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
2. புவிக்கோளின் சாம்பியனுக்கான ஐநா விருது: இது ஐநா சபையின் மிக உயரிய சுற்றுச்சூழலுக்கான விருதாகும் உலகளாவிய அரங்கில் பிரதமர் மோடியின் துணிச்சலான சுற்றுச்சூழல் தலைமைத்துவத்தை அங்கீகரித்து . 2018-ல் ஐநா இதனை வழங்கியது.
3. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக” பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.
4. “உலகளாவிய கோல்கீப்பர் விருது”: தூய்மை இந்தியா திட்டத்திற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால் இந்த விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா பிரச்சாரத்தை “மக்கள் இயக்கமாக” மாற்றிய மற்றும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் தூய்மைக்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்த இந்தியர்களுக்கு இந்த விருதினைப் பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.
5. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக” பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.