17 வயதில் அனைத்து இளைஞர்களும் தங்களது வருங்காலம் குறித்தும், குழந்தப்பருவத்தின் நிறைவு தருவாயை மகிழ்ச்சியுடன் களிக்கும் தருணத்தில், அப்பருவத்தில் இருந்த திரு. நரேந்திர மோடியின் சிந்தனை வேறாக இருந்தது. 17 வயதில், தமது வாழ்க்கை முறையையே மாற்றியமைக்கும் வகையில், அவர் மிகச் சிறந்த முடிவை எடுத்தார். அவர் வீட்டை விட்டு வெளியேறி நாடு முழுவதும் சுற்றி வர முடிவெடுத்தார்.

அவரது குடும்பத்தினர் அதிர்ந்து போனாலும், திரு.நரேந்திராவின் குக்கிராம வாழ்க்கையை விட்டு வெளியேறும் முடிவை ஏற்றுக் கொண்டனர். இறுதியாக அவர் வீட்டை விட்டு வெளியேறும் நாளன்று அவரது தாயார் சிறப்பான நிகழ்வுகளில் தயாரிக்கப்படும் இனிப்பு பலகாரத்தை தயாரித்து அளித்ததுடன், நெற்றியில் ‘திலக’த்தையும் இட்டார்.

இமயமலைப்பகுதி (கருடாசட்டியில் அவர் தங்கியிருந்த இடம்), மேற்கு வங்காளத்தில் ராமகிருஷ்ணா ஆசிரமம் மற்றும் வட கிழக்கு பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். இந்த இளைஞரிடையே இப்பயணங்கள் மிக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் விரிவாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களை கண்டறிந்தார். அத்தருணத்தில் தான், அவர் என்றும் விரும்பும் சுவாமி விவேகானந்தரிடம் மேலும் பற்றுக் கொண்டு தன்னில் இருந்த தெய்வீக உணர்வை அறிந்துக் கொண்டார்

The Activistநரேந்திர மோடியின் குழந்தைப்பருவம்

ஆர்.எஸ்.எஸ்.-ன் அழைப்பு

இரண்டு வருடங்களுக்கு பின்பு திரும்பிய அவர், வீட்டில் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்கியிருந்தார்.  இம்முறை அவர் செல்ல வேண்டிய இடத்தையும், இலக்கையும் தெளிவாக்கி கொண்டார் – அகமாதாபாத்திற்கு சென்று, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) பணியாற்ற முடிவு செய்தார். 1925-ல் ஏற்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சார மீள் உருவாக்கத்திற்காக பாடுபடும் சமூக-கலாச்சார இயக்கமாகும்.

The Activist

தினந்தோறும் தனது குடும்ப தேனீர் கடையின் வேலைகள் முடிவுற்ற பின் அவர், உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். இளைஞர் கூட்டங்களில் எட்டு வயதில் கலந்துக் கொண்டதே அவர் முதன்முதலில் ஆர்.எஸ்.எஸ். சுடன் கொண்ட அறிமுகமாகும். அத்தகைய கூட்டங்களில் கலந்துக் கொண்டதற்கான காரணம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. இங்கு தான் அவர் வாழ்வில் உணர்வூட்டிய முக்கிய மனிதரான, ‘வக்கீல்சாகிப்’ என அழைக்கப்பட்ட திரு.லஷ்மண் ராவ் இனாம்தார்  அவர்களை சந்தித்தார்.

The Activist

ஆர்.எஸ்.எஸ். நாட்களில் திரு. நரேந்திர மோடி 

அகமாதாபாத் மற்றும் அதைத் தாண்டிய பயணம்

இந்த பின்னணியில், 20 வயதான திரு. நரேந்திரர் குஜராத்தின் மிகப் பெரிய நகரமான அகமாதாபாத்திற்கு வந்தார். ஆர்.எஸ்.எஸ். முழுநேர உறுப்பினராக ஆன அவரின் அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு திறன்கள் வக்கீல் சாகிப் மற்றும் பிறரையும் ஈர்த்தது. 1972-ல் அவர் பிரச்சாராக மாறி, தனது முழு நேரத்தையும் ஆர்.எஸ்.எஸ்—ற்காக அளித்தார். அவர் தனது அறையை பிற பிரச்சாரகர்களுடன் பகிர்ந்துக் கொண்டு, கடுமையான தினசரி வாழ்க்கை முறையை கடைபிடித்தார்.  5.00 மு.ப. துவங்கும் நாள் பின்னிரவில் முடியும். இந்த கடுமையான வாழ்க்கை முறையிலும் திரு. நரேந்திரா அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். அவர் கல்வி மற்றும் கற்றவை எப்போதும் மதித்தார்.

பிரச்சாரகராக, அவர் குஜராத் முழுதும் பயணித்தார். 1972 மற்றும் 1973 இடையே அவர், கேடா மாவட்டத்தின் ஒரு பகுதியான நாடியாத்தில் உள்ள சந்த்ராம் மந்திரில் தங்கியிருந்தார். 1973-ல் சித்பூரில் மிகப் பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்யும் பொறுப்பு திரு. நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் சங்கத்தின் மூத்த தலைவர்களை சந்தித்தார்.

The Activist

திரு.நரேந்திர மோடி ஆர்வலராக பணியாற்றும் நேரத்தில், குஜராத் மற்றும் இந்தியா முழுவதும் கொந்தளிப்புடன் இருந்தது. அவர் அகமதாபாத்தை அடைந்தபோது, அந்நகரம் மிகப் பெரிய சமூக வன்முறையை சந்தித்திருந்தது. நாடு முழுவதிலும் கூட, காங்கிரஸ் கட்சி, 1967 மக்களவை தேர்தலுகக்குப் பின்னர் மிகப் பெரிய சரிவை சந்தித்ததுடன், திருமதி. இந்திரா காந்தி மற்றும் குஜராத்தை சேர்ந்த திரு. மொரார்ஜி தேசாய் ஆகியோரின் தலைமையில் இரண்டாக பிரிந்தது. வறுமையை ஒழிப்பதாக கூறிக் கொண்டு, திருமதி. காந்தி 1971 மக்களை தேர்தல்களில் 518 இடங்களில் 352 இடங்களில் வெற்றி பெற்று, இந்திய நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களை பெற்ற கட்சியாக விளங்கியது.

குஜராத் மாநில தேர்தல்களில் கூட, 182 இடங்களில் 140 இடங்களில் வெற்றி பெற்று, 50% க்கும் மேலாக வாக்குகளை பெற்று பலத்தை வெளிப்படுத்தினார்.

The Activist

நரேந்திர மோடி – தீவிர பிரச்சாரகர்

எனினும், காங்கிரஸ் மற்றும் திருமதி. காந்தியின் மீது விரைவாக ஏற்பட்ட நம்பிக்கை அதே விரைவில் மறைந்து போனது. விரைவான சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றம் ஆகிய கனவுகளை கொண்டிருந்த குஜராத்தில் உள்ள சாதாரண மக்களிடையே ஏமாற்றமே ஏற்பட்டது. திரு. இந்துலால், திரு.யாக்னிக், ஜிவ்ராஜ் மேத்தா மற்றும் திரு. பல்வந்த் ராய் மேத்தா போன்ற அரசியல் புள்ளிகளின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள், அரசியல் மோகத்தால் மறைந்து போனது.

1960-களின் முடிவு மற்றும் 1970-களின் துவக்கத்தில், குஜராத்தில் இருந்த காங்கிரஸ் அரசின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் புதிய உச்சத்தை எட்டியது. மிகப் பெரிய வாக்குறுதியான ‘வறுமை ஒழிப்பு” என்பது ‘ஏழை ஒழிப்பு”-ஆக மெல்ல மாறியது. குஜராத்தில், ஏழைகளின் வாழ்க்கை மிகவும் மோசமானதுடன், கடும் வறட்சி மற்றும் கடும் விலையேற்றம் ஆகியவையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மாநிலத்தில் அடிப்படை பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் காட்சி பொதுவாகி போனது. பொது மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை

புனரமைப்பு இயக்கம்: இளைஞர்களின் சக்தி

இந்த அதிருப்தி, 1973, டிசம்பரில், மோர்பி பொறியியல் கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் தங்களது உணவு கட்டணம் உயர்ந்ததை எதிர்த்து போராட்டம் நடத்தியதன் மூலம் மக்களின் அதிருப்தி, பொதுவான கோபமாக மாறியது. இத்தகைய போராட்டங்கள் குஜராத் மாநிலம் முழுவதும் நடைபெறத் துவங்கின. இத்தகைய போராட்டங்கள் பெருத்த ஆதரவை பெற்று, அரசிற்கு எதிரான மிகப்பெரிய இயக்கமாக மாறி புனரமைப்பு இயக்கம் என அழைக்கப்பட்டது.

அனைத்து தரப்பினரையும் கவர்ந்த மிகப் பெரிய இயக்கம் திரு. நரேந்திர மோடியையும் ஈர்த்தது. இந்த இயக்கம், பொதுமக்களின் நன் மதிப்பிற்கு உரியவரும், ஊழலுக்கு எதிராக போராடுபவருமான திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் ஆதரவை பெற்றதன் மூலம் மேலும் வலுப்பெற்றது. திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அகமாபாத் வந்தபோது, திரு.நரேந்திரா ஜே.பி- அவர்களை சந்திக்கும் உயரிய வாய்ப்பை பெற்றார். அந்த முதுபெரும் தலைவர் மற்றும் பிற தலைவர்களின் பேச்சுக்கள் இள நரேந்திரரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

The Activist

வரலாற்று சிறப்புமிக்க புனரமைப்பு இயக்கம் 

இறுதியாக மாணவர் சக்தி வெற்றி பெற்று, அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் ராஜினாமா செய்தார். அந்த மகிழ்ச்சி குறுகிய காலமே நீடித்தது. 1972, ஜூன், 25 நடுஇரவில், பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி நெருக்கடி நிலைக்கான அவசர சட்டத்தை பிறப்பித்ததன் மூலம், அதிகாரத்தின் கருப்பு மேகங்கள் சூழத் துவங்கின.

அவசர சட்டத்தின் கருப்பு நாட்க

தேர்தலை செல்லாது என அறிவித்த நீதிமன்றத்தின் ஆணையால் தனது உயரிய தலைமை பதவி பறிபோய் விடுமோ என பயந்த திருமதி. காந்தி, அத்தருணத்தில் அவசர சட்டமே சிறந்த வழி என நினைத்தார். ஜனநாயகத்திற்கு தடை விதிக்கப்பட்டது, பேச்சு சுதந்திரம் நசுக்கப்பட்டது மற்றும் முக்கிய எதிர்கட்சித் தலைவர்களான திரு.அடல் பிகாரி வாஜ்பாய், திரு.எல்.கே.அத்வானி, திரு.ஜார்ஜ் பெர்னாண்டஸ் முதல் திரு.மொரார்ஜி தேசாய் வரை கைது செய்யப்பட்டனர்

The Activist

நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது திரு.நரேந்திர மோடி

நரேந்திர மோடி நெருக்கடி நிலைக்கு எதிரான இயக்கத்தின் முக்கியமாக இருந்தார். அடக்குமுறைக்கு எதிராக உருவாக்கப்பட்ட குஜராத் லோக் சங்கர்ஷ் சமித்தி (ஜி.எல்.எஸ்.எஸ்.)-ன் பிரிவாக அவர் இருந்தார். அவர் ஜி.எல்.எஸ்.எஸ்-ன் பொதுச் செயலாளராக உயர்ந்தார். மாநிலம் முழுவதிலும் உள்ள ஆர்வலர்களை ஒன்றிணைப்பதே அவரது முக்கிய கடமையாக இருந்தது. கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட காங்கிரஸ் அல்லாத தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் உட்பட்டிருந்தபோது, இது மிகவும் கடினமானதாகும்.

நெருக்கடி நிலையின் போது திரு.நரேந்திர மோடியின் பணி குறித்து பல கதைகள் உலவுவது உண்டு. அதில் ஒன்று, அவர் எவ்வாறு ஸ்கூட்டரை ஓட்டி தேடப்பட்டு வந்த மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை பாதுகாப்பான இல்லத்திற்கு எடுத்து சென்றார் என்பதாகும். அது போன்று, தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் முக்கிய ஆவணங்கள் சில இருந்தன. அதனை எவ்வாறாவது பெற்றாக வேண்டும். அத்தலைவர் வைக்கப்பட்டுள்ள காவல் நிலையத்திலிருந்து அத்தாள்களை காவல் துறையின் முன்பாக பெற்று வரும் பொறுப்பு திரு.நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டது! திரு.நானாஜி தேஷ்முக் கைது செய்யப்பட்டபோது, அவருடன் அனுதாபிகளின் முகவரிகள் கொண்ட புத்தகத்தை வைத்திருந்தார்.  திரு.நரேந்திர மோடி அதில் உள்ள அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றதன் மூலம் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

குஜராத் முழுவம் அவசர சட்டத்திற்கு எதிரான ஆர்வலர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யும் பொறுப்பு உள்ளிட்ட பல பொறுப்புகள் திரு.நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டன. அப்பணியால், சில நேரங்களில், அவர் தன்னை கண்டறியாதவண்ணம் மாறுவேடம் பூணும்படி – சீக்கிய இளைஞராக ஒரு நாள் மற்றும் தாடி வைத்த முதியவராக அடுத்த நாள் – என மாறுவேடம் பூண வேண்டிய நிலை ஏற்பட்டது..

The Activist

நெருக்கடி நிலை காலங்களில் பல்வேறு கட்சிக சேர்ந்த தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் பணிபுரிய நேரிட்ட தருணம் திரு.நரேந்திர மோடியின் மகிழ்வான அனுபவங்களாகும்.  திரு. நரேந்திர மோடி தனது வலைப்பூவில் 2013, ஜூனில் எழுதியுள்ளார் :

என்னை போன்ற இளைஞர்களுக்கு, நெருக்கடி நிலை, லட்சியத்திற்காக போராடிய பல்வேறு தரப்பட்ட தலைவர்கள் மற்றும் இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றும் அரிய வாய்ப்பை வழங்கியது. அவை நாங்கள் வளர்க்கப்பட்ட இயக்கங்களை தவிரவும் பணியாற்ற வைத்தன. நெருக்கடி நிலையை விரும்பாத நமது குடும்பத்தின் முக்கியஸ்தர்களான அடல்ஜி, அத்வானிஜி, காலஞ்சென்ற திரு.தத்தோபந்த் தெங்காடி, காலஞ்சென்ற திரு.நானாஜி தேஷ்முக்,  சமூகவாதிகளான திரு.ஜார்ஜ் பெர்னாண்டஸ், காங்கிரஸ்காரர்களான மொரார்ஜி தேசாயுடன் பணியாற்றிய காலஞ்சென்ற திரு.ரவீந்திர வர்மா போன்ற பல்வேறு சிந்தனைகள் கொண்ட தலைவர்களுடன் பழகியது உற்சாகமளித்தது. குஜராத் வித்யாபீத் முன்னாள் துணைவேந்தர் திரு.திருபாய் தேசாய், மனிதாபிமானி திரு.சி.டி.தாரு மற்றும் குஜராத் முன்னாள் முதலமைச்சர்கள் திரு.பாபுபாய் ஜஷ்பாய் பட்டேல் மற்றும் திரு.சிமன்பாய் பட்டேல் மற்றும் முக்கிய இஸ்லாமிய தலைவரான  காலஞ்சென்ற திரு.ஹபீப்-உர்-ரெஹ்மான் போன்றவர்களிடமிருந்து பலவற்றை கற்கும் வாய்ப்பு கிடைத்தது. காங்கிரசின் அதிகாரத்துவத்தை முழுமையாக எதிர்த்து, கட்சியையும் விட்டு விலகிய காலஞ்சென்ற திரு.மொரார்ஜி தேசாயின் போரட்டம் மற்றும் நம்பிக்கை என் நினைவில் வருகிறது.  

அது வலுவான சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் மிகுந்த நன்மைக்காக நடைபெறும் கூட்டம் போன்று இருந்தது. ஜாதி, இனம், சமூகம் மற்றும் மதம் போன்ற வித்தியாசங்களை கடந்து நாங்கள், - நாட்டில் ஜனநாயக மாண்பை நிலைநிறுத்த வேண்டும்- என்ற ஒரே குறிக்கோளுடன் உழைத்தோம்.1975, டிசம்பரில், காந்திநகரில் அனைத்து எதிர்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய கூட்டத்திற்காக உழைத்தோம். இக்கூட்டத்தில் சுதந்திர நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.புருஷோத்தம் மாவலங்கர், திரு.உமா சங்கர் ஜோஷி மற்றும் திரு.கிரிஷன் கந்த் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, திரு.நரேந்திர மோடி, சமூக இயக்கங்கள் மற்றும் பல்வேறு காந்தியவாதிகளுடன் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். அவர், திரு.ஜார்ஜ் பெர்ணான்டஸ் (அவரை அவர் ‘ஜார்ஜ் சாஹேப்’ என்றழைப்பார்) மற்றும் திரு.நானாஜி தேஷ்முக் ஆகியே இருவரையும் சந்தித்தை உற்சாகத்துடன் நினைவு கூர்ந்தார். அக்கருப்பு நாட்களில், அவர் தனது அனுபவங்களை எழுதி வந்தார், பின்னர் அவை ‘ஆபத்கல் மே குஜராத்’ என்ற புத்தகமாக வெளிவந்தது. (அவசரசட்டத்தின்போது குஜராத்).

அவசர சட்டத்திற்கு பின்பு

புனரமைப்பு இயக்கம் போலவே, அவசர சட்டத்திற்கு பின்பு மக்கள் வெற்றி பெற்றனர். 1997-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருமதி. இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டார். மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்தனர். புதிய ஜனதா கட்சி அரசில், ஜனசங் தலைவர்களான வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் முக்கிய காபினெட் அமைச்சர்களாக ஆகினர்.

அதே நேரத்தில், கடந்த காலத்தில் அவரது செயல் மற்றும் ஒருங்கிணைப்பு பணியை பாராட்டும் வகையில் திரு. நரேந்திர மோடி, ‘ஷம்பாக் பிரசாரக்’ ஆக நியமிக்கப்பட்டார் (பிராந்திய ஒருங்கிணைப்பாளருக்கு நிகரானது). அவருக்கு தெற்கு மற்றும் மத்திய குஜராத் பொறுப்பு வழங்கப்பட்டது. அதே நேரம், அவர் தில்லிக்கு வரவழைக்கப்பட்டு அவசர சட்ட காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அதிகாரபூர்வ வரலாற்றை எழுத கோரப்பட்டார். பிராந்திய மற்றும் தேசிய பணிகளை சமமாக பாவித்து கையாண்டு, இந்த அதிக பணிச்சுமையை, எளிதாகவும் திறமையாகவும் கையாண்டார்.

The Activist

குஜராத் உள்ள ஒரு கிராமத்தில் திரு.நரேந்திர மோடி 

அவரது குஜராத் முழுவதுமான பயணம் தொடர்ந்ததுடன், 1980 துவக்கத்தில் அதிகரித்தது. இது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தாலுக்காவிற்கும், ஏறக்குறைய அனைத்து கிராமத்திற்கும் செல்லும் வாய்ப்பை அவருக்கு அளித்தது. இந்த அனுபவம் அவர் ஒருங்கிணைப்பாளராகவும், முதலமைச்சராகவும் செயல்படுவதற்கு பெரிதும் உதவியது. இது அவர் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நேரிடையாக கண்டறிய வைத்ததோடு, அவர்களுக்காக தீவிரமாக உழைக்கத் தூண்டியது. வறட்சிகள், வெள்ளப்பெருக்குகள் அல்லது வன்முறைகள் ஏற்படும்போது, அவர் மீட்பு பணிகளுக்கு தலைமை தாங்கினார்.

திரு. நரேந்திர மோடி தனது பணியில் மகிழ்வுடன் மூழ்கியிருந்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் புதிதாக துவங்கப்பட்ட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் வேறாக சிந்தித்தனர்- அவர்கள் இவர் மேலும் பல பொறுப்புகளை தாங்க வேண்டும் என நினைத்தனர், 1987-ல் திரு. நரேந்திர மோடியின் வாழ்வில் புதிய அத்தியாயம் துவங்கியது. அதன் பின்னர், அவர் தெருக்களில் வெகுவாக பயணித்து, கட்சி வளர்ப்பதற்கு உழைக்க ஆரம்பித்தார். இதற்கான அவர் கட்சித் தலைவர்களுடனும், காரியகர்த்தாக்களுடனும் உழைக்க வேண்டியிருந்தது.

நாட்டிற்கு சேவையாற்ற விரும்பி வீட்டை விட்டு வெளியேறிய வாத்நகரை சேர்ந்த சிறுவன் அடுத்து மிகப் பெரிய அடியை எடுத்த வைக்க உள்ளான், ஆனால் அவனுக்கு அது அவனது தேச ஆண்கள் மற்றும் பெண்கள் முகத்தில் புன்சிரிப்பை ஏற்படுத்துவதற்கான பயணமே ஆகும். கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை சென்று வந்த பின், திரு.நரேந்திர மோடி, குஜராத் பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக பணியைத் துவக்கினார்

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Record Voter Turnout in Kashmir Signals Hope for ‘Modi 3.0’

Media Coverage

Record Voter Turnout in Kashmir Signals Hope for ‘Modi 3.0’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi’s endeavour to transform sports in India
May 09, 2024

Various initiatives including a record increase in India’s sports budget, Khelo India Games, and the Target Olympic Podium Scheme showcase the Modi government’s emphasis on transforming sports in India. PM Modi’s endeavour for hosting the ‘Youth Olympics’ and the ‘Olympics 2036’ in India showcases the pioneering transformation and vision for India’s sports in the last decade.

Anju Bobby George, Athlete hailed PM Modi’s support being unprecedented for sports and narrated how PM Modi met her and enquired about the issues concerning sports in India. She said that PM Modi deeply enquired about the various issues and sought to resolve these issues on a mission mode to transform sports in India.

Along with an intent to resolve issues, PM Modi always kept in touch with various athletes and tried to bring about a systemic change in the way sports were viewed in India. Moreover, India’s sporting transformation was also a result of the improved sporting infrastructure in the country.

“PM Modi is really interested in sports. He knows each athlete… their performance. Before any major championships, he is calling them personally and interacting with them… big send-offs he is organising and after coming back also we are celebrating each victory,” she remarked.

Every athlete, she added, was happy as the PM himself was taking keen interest in their careers, well-being and performance.