இந்தியாவில், பாரம்பரியம் புதுமைகளை சந்திக்கிறது, ஆன்மீகம் அறிவியலை சந்திக்கிறது, ஆர்வம் படைப்பாற்றலை சந்திக்கிறது; பல நூற்றாண்டுகளாக, இந்தியர்கள் வானத்தை கவனித்து முக்கிய கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்: பிரதமர்
உலகின் மிக உயரமான வானியல் ஆய்வகங்களில் ஒன்றை லடாக்கில் நாம் கொண்டிருக்கிறோம், கடல் மட்டத்திலிருந்து 4,500 மீட்டர் உயரத்தில், நட்சத்திரங்களுடன் கைகுலுக்கும் அளவுக்கு அது அருகில் உள்ளது: பிரதமர்
அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதிலும் இளம் மனங்களை மேம்படுத்துவதிலும் இந்தியா ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது: பிரதமர்
நாம் பிரபஞ்சத்தை ஆராயும்போது, விண்வெளி அறிவியலால், பூமியில் உள்ள மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதையும் நாம் கேட்க வேண்டும்: பிரதமர்
சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது, இந்த ஒலிம்பியாட் அந்த உணர்வை பிரதிபலிக்கிறது: பிரதமர்

மாண்புமிகு விருந்தினர்களே, சிறப்புமிக்க பிரதிநிதிகளே, ஆசிரியர்களே, வழிகாட்டிகளே, என் அன்பான இளம் நண்பர்களே, வணக்கம்!


64 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரகாசிக்கும் நட்சத்திரங்களுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. 18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் நிகழ்விற்காக, இந்தியாவிற்கு வந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்தியாவில் பாரம்பரியம் புதுமைகளை சந்திக்கிறது, ஆன்மீகம் அறிவியலை சந்திக்கிறது, ஆர்வம் படைப்பாற்றலை சந்திக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியர்கள் வானத்தை கவனித்து முக்கிய கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். உதாரணமாக, 5 ஆம் நூற்றாண்டில், ஆர்யபட்டா பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தார். பூமி அதன் அச்சில் சுழல்கிறது என்று முதன்முதலில் கூறியவரும் அவரே. உண்மையில், அவர் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி வரலாற்றை உருவாக்கினார்!


இன்று, லடாக்கில் உலகின் மிக உயரமான வானியல் ஆய்வகங்களில் ஒன்றை நாம் கொண்டுள்ளோம். கடல் மட்டத்திலிருந்து 4,500 மீட்டர் உயரத்தில், நட்சத்திரங்களுடன் கைகுலுக்கும் அளவுக்கு அது அருகில் உள்ளது! புனேவில் உள்ள நமது ஜெயண்ட் மீட்டர்வேவ் ரேடியோ தொலைநோக்கி உலகின் மிக உணர்திறன் வாய்ந்த ரேடியோ தொலைநோக்கிகளில் ஒன்றாகும். இது பல்சர்கள், குவாசர்கள் மற்றும் விண்மீன் திரள்களின் மர்மங்களை டிகோட் செய்ய உதவுகிறது!


ஸ்கொயர் கிலோமீட்டர் அரே மற்றும் லீகோ-இந்தியா போன்ற உலகளாவிய மெகா-அறிவியல் திட்டங்களில் இந்தியா பெருமையுடன் பங்களிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நமது சந்திரயான்-3 வரலாறு படைத்தது. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு, நாம்தான். ஆதித்யா-எல்1 சூரிய ஆய்வகம் மூலம் சூரியனையும் நாம் ஆய்வு செய்கிறோம். இது சூரிய சுடரொளி வீச்சு, புயல்கள் மற்றும் சூரியனின் மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றைக் கண்காணித்து வருகிறது! கடந்த மாதம், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான தனது வரலாற்றுப் பயணத்தை நிறைவு செய்தார். இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணமாகவும், உங்களைப் போன்ற இளம் ஆய்வாளர்களுக்கு ஒரு உத்வேகமாகவும் இருந்தது.


நண்பர்களே,
இந்தியா அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதிலும், இளம் மனங்களை மேம்படுத்துவதிலும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது. அடல் டிங்கரிங் ஆய்வகங்களில் 10 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் ஸ்டெம் கருத்துருக்களை நேரடி பரிசோதனை மூலம் புரிந்துகொள்கிறார்கள். இது கற்றல் மற்றும் புதுமை கலாச்சாரத்தை உருவாக்குகிறது. அறிவுசார் அணுகலை மேலும் ஜனநாயகமாக்க, ஒரு நாடு ஒரு சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது மில்லியன் கணக்கான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு புகழ்பெற்ற சர்வதேச பத்திரிகைகளை இலவசமாக அணுக அனுமதிக்கிறது. ஸ்டெம் களங்களில் பெண்களின் பங்கேற்பில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். பல்வேறு முயற்சிகளின் கீழ், ஆராய்ச்சி சூழலியலில் பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள உங்களைப் போன்ற இளம் மனங்களை இந்தியாவில் படிக்கவும், ஆராய்ச்சி செய்யவும், ஒத்துழைப்பு வழங்கவும் அழைக்கிறோம். அடுத்த பெரிய அறிவியல் முன்னேற்றம் அத்தகைய கூட்டாண்மைகளிலிருந்தும்  பிறக்கக்கூடும்!


நண்பர்களே,
உங்கள் எல்லா முயற்சிகளிலும், மனிதகுலத்தின் நலனுக்காக நாம் எவ்வாறு செயல்பட முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன். பிரபஞ்சத்தை ஆராயும்போது, விண்வெளி அறிவியலால் பூமியில் உள்ள மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதையும் நாம் கேட்க வேண்டும். விவசாயிகளுக்கு இன்னும் சிறந்த வானிலை முன்னறிவிப்புகளை எவ்வாறு வழங்க முடியும்? இயற்கை பேரழிவுகளை கணிக்க முடியுமா, காட்டுத் தீ மற்றும் உருகும் பனிப்பாறைகளை நம்மால் கண்காணிக்க முடியுமா? தொலைதூரப் பகுதிகளுக்கு சிறந்த தகவல்தொடர்புகளை உருவாக்க முடியுமா? அறிவியலின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. கற்பனை மற்றும் இரக்கத்துடன் நிஜ உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அது உள்ளது. "வெளியே என்ன இருக்கிறது?" என்று கேட்கவும், அது இங்கே நமக்கு எவ்வாறு உதவும் என்பதைப் பார்க்கவும் நான் உங்களை வலியுறுத்துகிறேன்.

நண்பர்களே,
சர்வதேச ஒத்துழைப்பின் ஆற்றலை இந்தியா நம்புகிறது. இந்த ஒலிம்பியாட் அந்த உணர்வை பிரதிபலிக்கிறது. இதுவரை நடந்த ஒலிம்பியாட்டின் இந்தப் பதிப்பு இதுவரை நடந்தவற்றில் மிகப்பெரியது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்திற்கு நன்றி கூறுகிறேன். உயர்ந்த இலக்கை  நிர்ணயிங்கள், பெரிதாக கனவு காணுங்கள். மேலும் நினைவில் கொள்ளுங்கள், இந்தியாவைப் பொறுத்தவரையில், வானம் என்பது எல்லை அல்ல, அது வெறும் ஆரம்பம் தான் என்று நாங்கள் நம்புகிறோம்!
நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
HPV vaccination drive crosses 8 mn doses as India targets cervical cancer

Media Coverage

HPV vaccination drive crosses 8 mn doses as India targets cervical cancer
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 11, 2026
September 11, 2026

Seva Pakhwada to Superpower Status: Why Citizens Are Hailing PM Modi’s Relentless Push