டென்ட் சிட்டியை அவர் துவக்கினார்
ரூ.1000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பிற உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
ஹால்டியாவில் பன்மாதிரி முனையத்தை திறந்து வைத்தார்
"எம்வி கங்கா விலாஸ் கப்பல் மூலம் கிழக்கு இந்தியாவின் பல சுற்றுலாத் தலங்கள் பயனடையும்"
" ஒரு புதிய வளர்ச்சிப் பாதையை இந்தக் கப்பல் உருவாக்கும்"
இந்தியாவின் இந்த நதிக் கப்பல் சுற்றுலாவின் புதிய யுகத்தை ஏற்படுத்தும்.
நவீனத்துவம், ஆன்மீகம், நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்ட புதுமையான அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு புதிய டென்ட் சிட்டி வழங்கும்.
அனைத்து துறைகளிலும் இந்தியா சிறந்த, மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இது உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் இருந்து பங்களாதேசுக்கு வணிகத்தை எளிதாக்கும் என்று அவர் கூறினார்.
நதிக் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்தும் பிரதமரின் முயற்சி, இந்தச் சேவை தொடங்கப்பட்டதன் மூலம், நதிக்கப்பல் பயணங்களின் மிகப் பெரிய சாத்தியக்கூறுகளுடன், இந்தியாவிற்கான நதிக் கப்பல் சுற்றுலாவின் புதிய யுகத்தை அறிவிக்கும்.

ஹர ஹர மகாதேவ!

பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், எனது அமைச்சரவை சகாக்கள், சுற்றுலாத் துறை நண்பர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வாரணாசிக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள், இதர பிரமுகர்கள், பெண்கள் மற்றும் அன்பர்களே!

இன்று நாம் லோஹ்ரி பண்டிகையை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுகிறோம். வரும் நாட்களில் உத்தராயணம், மகர சங்கராந்தி, போகி, பிஹு, பொங்கல் என பல்வேறு பண்டிகைகளையும் கொண்டாடுவோம்.

நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்த விழாக்களை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

நமது பண்டிகைகள், தொண்டுகள், தவம், நமது தீர்மானங்களை நிறைவேற்றுவதில் நமது உறுதிப்பாடு மற்றும் நமது நம்பிக்கைகள் ஆகியவை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. அதில் நமது நதிகளின் பங்கு முக்கியமானது. இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில், உள்நாட்டு நீர்வழிகள் மேம்பாடு தொடர்பான ஒரு பெரிய கொண்டாட்டத்தை நாம் அனைவரும் காண்கிறோம். இன்று, உலகின் மிக நீளமான நதிக் கப்பல் - கங்கா விலாஸ் கப்பல் காசி மற்றும் திப்ருகர் இடையே தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, கிழக்கு இந்தியாவின் பல சுற்றுலாத் தலங்கள் உலக சுற்றுலா வரைபடத்தில் அதிக முக்கியத்துவம் பெறப் போகின்றன. காசியில் கங்கையின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்ட இந்த அற்புதமான கூடார நகரம், நம் நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் இங்கு சென்று சில நாட்கள் தங்குவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் பல மாதிரி முனையங்கள், உ.பி. மற்றும் பீகாரில் மிதக்கும் படத்துறைகள், கடல்சார் திறன் மையம், கப்பல் பழுதுபார்க்கும் மையம் மற்றும் அசாமில் முனைய இணைப்புத் திட்டம் போன்ற ரூ.1,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதர திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இவை கிழக்கு இந்தியாவில் வர்த்தகம் மற்றும் சுற்றுலா தொடர்பான செயல்பாடுகளை விரிவுபடுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகின்றன.

 

நண்பர்களே,

கங்கை நமக்கு வெறும் நதி அல்ல. மாறாக, பழங்காலத்திலிருந்தே இந்தப் பெரிய பாரத நாட்டில் தவம் செய்ததற்கு அவர் தான் சாட்சி. இந்தியாவின் நிலைமைகள் என்னவாக இருந்தாலும், அன்னை கங்கை எப்போதும் கோடிக்கணக்கான இந்தியர்களை வளர்த்து ஊக்குவித்து வருகிறார். சுதந்திரத்திற்குப் பிறகு கங்கை நதிக்கரையில் உள்ள முழுப் பகுதியும் வளர்ச்சியில் பின்தங்கியே இருந்ததை விட துரதிர்ஷ்டவசமானது என்னவாக இருக்க முடியும்? இதனால், கங்கைக் கரையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். இந்த நிலைமையை மாற்ற வேண்டும்.  எனவே புதிய அணுகுமுறையுடன் செயல்பட முடிவு செய்தோம். ஒருபுறம், நமாமி கங்கை மூலம் கங்கையின் தூய்மைக்காக பாடுபட்டோம், மறுபுறம் 'ஆர்த் கங்கை' பிரச்சாரத்தையும் தொடங்கினோம். அர்த்த கங்கை என்றால், கங்கையைச் சுற்றி அமைந்துள்ள மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகளுக்கான புதிய சூழலை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த கங்கா விலாஸ் கப்பல் 'ஆர்த் கங்கா' பிரச்சாரத்திற்கு புதிய ஊக்கத்தை அளிக்கும். உத்தரபிரதேசம், பீகார், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யும் போது இந்த கப்பல் அனைத்து வகையான வசதிகளையும் வழங்கும்.

 

நண்பர்களே,

இன்று, இந்தக் கப்பலின் மூலம் முதல் பயணத்தைத் தொடங்க இருக்கும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் ஒரு பழங்கால நகரத்தின் வழியாக நவீன பயணத்தில் பயணிக்கப் போகிறீர்கள். இந்த வெளிநாட்டு சுற்றுலா நண்பர்களுக்கு நான் குறிப்பாக சொல்ல விரும்புகிறேன். நீங்கள் கற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் இந்தியா கொண்டுள்ளது. இது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிறைய உள்ளது. இந்தியாவை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது.

இந்தியாவை இதயத்திலிருந்து மட்டுமே அனுபவிக்க முடியும். ஏனென்றால், பிராந்தியம் அல்லது மதம், மதம் அல்லது நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், இந்தியா எப்போதும் அனைவருக்கும் தனது இதயத்தைத் திறந்திருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Elon Musk congratulates PM Modi on being most followed world leader on X

Media Coverage

Elon Musk congratulates PM Modi on being most followed world leader on X
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM condoles passing away of Vietnamese leader H.E. Nguyen Phu Trong
July 19, 2024

The Prime Minister, Shri Narendra Modi has condoled the passing away of General Secretary of Communist Party of Vietnam H.E. Nguyen Phu Trong.

The Prime Minister posted on X:

“Saddened by the news of the passing away of the Vietnamese leader, General Secretary H.E. Nguyen Phu Trong. We pay our respects to the departed leader. Extend our deepest condolences and stand in solidarity with the people and leadership of Vietnam in this hour of grief.”