NCC provides a platform to strengthen the spirit of discipline, determination and devotion towards the nation: PM Modi
India has decided that it will confront the challenges ahead and deal with them: PM Modi
A young India will play key role in fourth industrial revolution: PM

தில்லியில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படையினரின் பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். 

இந்த பேரணியையொட்டி நடத்தப்பட்ட தேசிய மாணவர் படையின் பல்வேறு பிரிவினர் மற்றும் பிற நட்பு மற்றும் அண்டை நாடுகளின் மாணவர் படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுடன், சாகச விளையாட்டுகள், இசை மற்றும் செயல்திறன் கலைகளையும், தேசிய மாணவர் படையினர் பிரதமர் முன்பாக செய்து காட்டினர்.  அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட தேசிய மாணவர் படையினருக்கு விருதுகளையும் பிரதமர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இளைஞர்கள் நாட்டுக்காகப் பணியாற்றுவதற்கான ஒழுக்க உணர்வு, குறிக்கோள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுகளை வலுப்படுத்த தேசிய மாணவர் படை ஒருசிறந்த அமைப்பாக திகழ்கிறது என்றார்.  இதுபோன்ற மாண்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 65%-க்கு மேல் 35 வயதிற்கு கீழே உள்ளவர்களைக் கொண்ட உலகின் இளமையான நாடுகளுள் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். “இந்தக் கருத்து நமக்கு பெருமிதம் அளித்தாலும், இளமையாக சிந்திப்பது நமது பொறுப்பாகும்” என்றும் அவர் கூறினார்.  எந்தவொரு பிரச்சினைக்கும் காலந்தாழ்த்தாமல் உடனடித் தீர்வு காண வேண்டும் என்பதே இதன்பொருளாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.  “இதுதான் ஒரு இளம் மனதின் ஏக்கம் என்பதோடு, இதுவே இளம் இந்தியா” என்றும் அவர் குறிப்பிட்டார். 

“கடந்த கால சவால்களை எதிர்கொள்ளும் போது, நிகழ்கால தேவைகளைக் கருத்தில் கொள்வதோடு, நமது எதிர்கால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் நாம் பாடுபட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.  இந்தியா தற்போது இளம் துடிப்புமிக்க பேரார்வம் மற்றும் மனநிலையுடன் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. “இந்தியா தற்போது இளமையான மனநிலை மற்றும் உள்ளத்தை கொண்டிருப்பதால், துல்லிய தாக்குதல், விமானத் தாக்குதல் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது நேரடித் தாக்குதல்களை நடத்த முடிகிறது”.  யாரும் பின்தங்கிவிடாத வகையில், அனைவரையும் அரவணைத்து முன்னேற்றம் காண, இந்த இளமையான மனநிலை விரும்புவதாக அவர் கூறினார்.  “இந்த உணர்வோடுதான் நாம் போடோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம், இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்த பிறகே ஒப்பந்தம் கையெழுத்தானது”.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகள் பற்றி சுட்டிக்காட்டிய பிரதமர், வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிப் பணிகளோடு, இந்தப் பிராந்தியத்துடன் தொடர்புடைய அனைத்துத்தரப்பினருடனும் மிகவும் வெளிப்படையான மனநிலையுடனும், வெளிப்படையான இதயத்துடனும் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கியிருக்கிறோம்.  இதன் விளைவாகத்தான் இன்று போடோ ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.  “இதுவே இளம் இந்தியாவின் சிந்தனையாகும்.  அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து, அனைவரையும் வளர்ச்சி அடையச் செய்வதோடு ஒவ்வொரு நம்பிக்கையையும் பெறுவதன் மூலம்  நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s data centre boom: Mumbai cracks global top 15, Hyderabad pipeline set to surge 15x

Media Coverage

India’s data centre boom: Mumbai cracks global top 15, Hyderabad pipeline set to surge 15x
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
கேலோ இந்தியா கலந்துரையாடல் - இளைஞர்களிடையே நாளை உரையாற்றுகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி
August 26, 2026
Khelo India Dialogue will bring together sports, youth leadership, civic responsibility, volunteering, fitness and nation-building on a common platform
Yuva Samvaad under Khelo India Dialogue to Focus on Five Key Themes: Sports, Olympic Aspirations, Youth Leadership, Viksit Bharat and Nasha Mukt Yuva

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 ஆகஸ்ட் 27) காலை 11 மணிக்கு, காணொலிக் காட்சி மூலம் 'கேலோ இந்தியா கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். இந்தியாவின் விளையாட்டுப் பயணத்தில் இளைஞர்களை ஈடுபடுத்துவதையும், அவர்கள் தங்களது எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவதையும், வளரச்சியடைந்த இந்தியாவுக்கான யோசனைகளை அவர்கள் வழங்குவதையும் இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

2026 தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மை பாரத் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கல்லூரிகளில் இளைஞர்களின் பங்கேற்புடன் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தேசிய வளர்ச்சித் திட்டத்தின் மையத்தில் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை வைத்து, ஆரோக்கியமான, ஒழுக்கமான, விளையாட்டுத் திறனுள்ள ஒரு தேசத்தை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

நாடு தழுவிய கேலோ இந்தியா கலந்துரையாடல், விளையாட்டு, இளைஞர் தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு, தன்னார்வத் தொண்டு, உடற்தகுதி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைக்கும். இது, நாட்டின் விளையாட்டு லட்சியங்களில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஒரு நேரடி வழியை வழங்குவதோடு, இந்தியாவின் இளைஞர்களின் விளையாட்டுச் சூழல் அமைப்பு குறித்த தொடர் உரையாடலில் அவர்களின் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் இடம்பெறுவதையும் உறுதி செய்யும்.

தேசிய அளவிலான இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இளம் பங்கேற்பாளர்கள், மை பாரத் தன்னார்வலர்கள், உள்ளூர் விளையாட்டு வீரர்கள், பொதுப் பிரதிநிதிகள் பங்கேற்கும் உள்ளூர் அளவிலான கலந்துரையாடல்கள் நடைபெறும். விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும், முன்னணி இந்திய விளையாட்டு வீரர்கள், பதக்கம் வென்றவர்களுக்கும் இடையேயான நேரடிக் கலந்துரையாடல் இந்த முன்முயற்சியின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியின் மைய அம்சமாக யுவ சம்வாத் எனப்படும் இளையோர் உரையாடல் இருக்கும். இதில் இளம் பங்கேற்பாளர்கள் தங்களின் சொந்த யோசனைகள், கண்ணோட்டங்கள், எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த அழைக்கப்படுவார்கள். இந்த உரையாடல் கீழ்க்கண்ட ஐந்து கருப்பொருள்களை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்படும்:

* மேம்பட்ட வசதிகள், பயிற்சி, விளையாட்டு அறிவியல், அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் விளையாட்டுச் சூழலை மேம்படுத்துதல்;

* அறிவியல் பூர்வமாக திறமை கண்டறிதல், வெளிப்படையான தேர்வு, நீண்டகால விளையாட்டு வீரர் நலன் ஆகியவற்றின் மூலம் 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்காக திறமையாளர்களை வளர்த்தெடுத்தல்;

* மை பாரத் தலைமையிலான தன்னார்வத் தொண்டு மூலம் இளைஞர் தலைவர்களை உருவாக்குதல்;

* சமூக உணர்வு, எதிர்காலத்திற்குத் தயாரான திறன்கள், கட்டமைக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி இளைஞர்களுக்கு வலுவூட்டுதல்;

* போதைப்பொருள் அற்ற இளைஞர் இயக்கத்தை ஊக்குவித்தல்.