வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் மாநாடு 2.0-இல் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி இளைஞர்களை இன்று கேட்டுக் கொண்டுள்ளார். தேச கட்டமைப்பிற்கு விலைமதிப்பில்லாத ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தங்களது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டின் இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வினாடி வினா போட்டியில் முதலில் பங்கேற்று, இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இளைஞர்களை அவர் ஊக்குவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் மாநாடு 2.0, நமது இளைஞர்கள் தேச கட்டமைப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகும். நமது இளைஞர்களின் கருத்துகள் மற்றும் நுண்ணறிவுகள், வளர்ச்சியடைந்த பாரதத்தை நிர்மாணிப்பதற்கான வழியைக் காட்டும்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு, முதலில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். இதில் பங்கேற்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்...
https://mybharat.gov.in/quiz ”
Viksit Bharat Young Leaders Dialogue 2.0 is a great opportunity for our youth to contribute towards nation building. The ideas and insights of our youth can show the way in building a Viksit Bharat.
— Narendra Modi (@narendramodi) October 27, 2025
The way to take part in this Dialogue is to first participate in this specially…


