திருச்சிராப்பள்ளியில் சுமார் 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு, கிராமப்புற இணைப்பு, நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் ரயில் சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் புதிய திட்டங்கள் விரிவடைந்துள்ளன
நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாரதி பெட்ரோலியம் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்; சென்னையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலவை ஆலையை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்
அடிக்கல் நாட்டுவார். அதன் பிறகு மாலை சுமார் 5:45 மணியளவில், திருச்சிராப்பள்ளியில் சுமார் 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார்.
இது, இந்தியாவின் உள்நாட்டு பாலிமர் உற்பத்தித் திறனை வலுப்படுத்தும், இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் பிராந்தியத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையே புதிய ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி மார்ச் 11, 2026 அன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். பிற்பகல் 1:30 மணியளவில், கேரளாவின் எர்ணாகுளத்தில் சுமார் 10,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு  வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுவார். அதன் பிறகு மாலை சுமார் 5:45 மணியளவில், திருச்சிராப்பள்ளியில் சுமார் 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார்.

எர்ணாகுளத்தில் பிரதமர்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்)-இன் கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில் பாலிப்ரொப்பிலீன் ஆலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த திட்டத்திற்கான முதலீடு சுமார் 5,500 கோடி ரூபாயாகும். இந்த பாலிப்ரொப்பிலீன் ஆலை ஆண்டுக்கு 400 கிலோ டன் கொள்ளளவு கொண்டது. இது, இந்தியாவின் உள்நாட்டு பாலிமர் உற்பத்தித் திறனை வலுப்படுத்தும், இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் பிராந்தியத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

சாலை உள்கட்டமைப்புத் துறையில், 2,650 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை-66 இன் தலப்பாடி-செங்கலா பிரிவின் ஆறு வழிச்சாலையையும், 2,140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெங்கலம் முதல் ராமநாட்டுக்கரை வரையிலான கோழிக்கோடு புறவழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். 

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கேரளாவில் கட்டப்பட்ட 23 சாலைகளையும் பிரதமர் திறந்து வைப்பார். இந்த சாலைகள் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இணைப்பை மேம்படுத்துவதுடன், சந்தைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை சிறப்பாக அணுகுவதை உறுதிசெய்து, அதன் மூலம் கிராமப்புற வாழ்வாதாரம் வலுவடையும்.

அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ், ஷொரணூர் சந்திப்பு, குட்டிப்புரம் மற்றும் சங்கனாச்சேரி ஆகிய மூன்று மறுமேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைப்பார். ஷொர்ணூர்-நிலம்பூர் சாலை ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையே புதிய ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். இது கேரளா மற்றும் தமிழ்நாடு இடையே ரயில் இணைப்பை வலுப்படுத்துகிறது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள மேற்கு கல்லாடாவில் 50 மெகாவாட் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

திருச்சிராப்பள்ளியில் பிரதமர்

திருச்சிராப்பள்ளியில் சுமார் 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் திரு மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார் மற்றும் கொடியசைத்து தொடங்கி வைப்பார். இந்தத் திட்டங்கள் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு, மசகு எண்ணெய் உற்பத்தி, கிராமப்புற இணைப்பு, நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் ரயில் சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கியதாகும்.

பெட்ரோலியத் துறையில், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 3,680 கோடி ரூபாய் முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்தத் திட்டம் 8.8 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்கும், 200க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு எரிவாயுவை வழங்கும் மற்றும் 201க்கும் மேற்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவும்.

சென்னையில் உள்ள மணலியில், ஆண்டுக்கு 672 ஆயிரம் மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மசகு எண்ணெய் கலவை ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். சுமார் 1,490 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை வலுப்படுத்தும்.

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளையும் பிரதமர் திறந்து வைப்பார். இது கிராமப்புறங்களில் சந்தைகள், பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கான இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். தேசிய நெடுஞ்சாலை 81 இல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

இரண்டு அமிர்த பாரத் விரைவு ரயில்கள், இரண்டு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். இது தமிழ்நாடு மற்றும் தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் கிழக்கு இந்தியா உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு இடையேயான ரயில் இணைப்பை வலுப்படுத்தும். இதன் மூலம் பயணிகள் பயனடைவதுடன், பிராந்திய பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s Defence Exports Explode: ₹40,000 Crore Milestone Signals a New Manufacturing Era

Media Coverage

India’s Defence Exports Explode: ₹40,000 Crore Milestone Signals a New Manufacturing Era
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares moments from his metro journey to and from the SRCC programme
September 05, 2026

Prime Minister Shri Narendra Modi today shared glimpses of his metro journey while traveling to and from the SRCC programme.

In a post on X, the Prime Minister shared:

"Metro moments…

On the way to the SRCC programme and back."