PM to participate in Rashtriya Ekta Diwas celebrations marking the 150th birth anniversary of Sardar Vallabhbhai Patel
Ekta Diwas Parade to feature tableaux depicting the theme ‘Unity in Diversity’
Amongst key attractions of parade: BSF marching contingent comprising exclusively Indian breed dogs such as Rampur Hounds and Mudhol Hounds
PM to inaugurate and lay foundation stone of infrastructure and development projects worth over Rs 1,140 crore in Ekta Nagar
Focus of projects: Enhance tourist experience, improve accessibility and support sustainability initiatives
PM to interact with Officer Trainees of 100th Foundation Course at the culmination of Aarambh 7.0

பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத்தில் அக்டோபர் 30, 31 அன்று பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 30 அன்று கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் மாலை 5.15 மணியளவில் மின்சார பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். மாலை 6.30 மணியளவில் ஏக்தா நகரில் ரூ.1,140 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற  திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

சூழல் சுற்றுலா, நவீன உள்கட்டமைப்பு, உலகின் உயரமான சிலையையொட்டிய பகுதிகளில் பழங்குடியினர் மேம்பாடு உள்ளிட்டவை இத்திட்டங்களில் அடங்கும். ராஜ்பிப்லாவில் பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகம், கருடேஷ்வரில்  விருந்தோம்பல் மாவட்டம் (முதற்கட்டம்), மின்சார பேருந்து மின்னேற்றி நிலையம் மற்றும் 25 மின்சார பேருந்துகள் இயக்கம், கௌசல்யா பாதை போன்ற நிறைவடைந்த திட்டங்களை அவர் தொடங்கிவைக்கிறார்.

மேலும் இந்திய அரசாட்சி அருங்காட்சியகம், வீரமிக்க சிறுவர் தோட்டம், விளையாட்டு வளாகம், மழைக்காடு திட்டம், சூல்பனேஷ்வர் கணவாயில் படகு இறங்குதள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 

அக்டோபர் 31 அன்று காலை 8.00 மணியளவில் ஒற்றுமை சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தினத்தையொட்டி தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. அப்போது ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்க வைத்து ஒற்றுமை தின அணிவகுப்பை பார்வையிடுகிறார். இந்த அணிவகுப்பில் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் காவல் படை, இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் பல்வேறு மாநிலங்களின் காவல்படையினர் பங்கேற்கின்றனர். மத்திய ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த சௌர்யா சக்ரா விருது பெற்ற 5 வீரர்கள், ஜார்க்கண்டில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு எதிரான செயல்கள் ஆகியவற்றில் துணிச்சலுடன் செயல்பட்டு வீர தீர பதக்கம் வென்ற 16 வீரர்கள் ஆகியோர் இந்த அணிவகுப்பில் கௌரவிக்கப்படவுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் துணிச்சலுடன் ஈடுபட்ட எல்லைப்பாதுகாப்பு படையினரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேசிய ஒற்றுமை அணிவகுப்பில் தேசிய பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, குஜராத், ஜம்முகாஷ்மீர், அந்தமான் நிக்கோபர் தீவுகள், மணிப்பூர், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தராகண்ட், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 10 அலங்கார ஊர்திகள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருப்பொருளில்  இடம்பெறவுள்ளன. அதன்பிறகு காலை 10.45 மணியளவில் ஆரம்ப் 7.0-ல் 100-வது பொது அடிப்படை கல்வி பயிற்சி அதிகாரிகளுடன் அவர் உரையாடவுள்ளார். இதில் 660 பயிற்சி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Why The SHANTI Bill Makes Modi Government’s Nuclear Energy Push Truly Futuristic

Media Coverage

Why The SHANTI Bill Makes Modi Government’s Nuclear Energy Push Truly Futuristic
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 19, 2025
December 19, 2025

Citizens Celebrate PM Modi’s Magic at Work: Boosting Trade, Tech, and Infrastructure Across India