உலக வன உயிரின தினம் என்பது நமது பூமியை வளமாக்கி, நமது சுற்றுச்சூழல் அமைப்புகளை நீடிக்கச் செய்யும் மகத்துவமிக்க வன உயிரினங்களின் பன்முகத்தன்மையை கொண்டாடுவது என்பதாகும். வன உயிரினங்களின் பாதுகாப்பிற்காக செயல்படும் அனைவரையும் அங்கீகரிப்பதையும் வனவாழ்விடம் தொடர்ந்து செழிக்க பாதுகாப்பு, நீடித்த நடைமுறைகள் மற்றும் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிபாட்டை மீண்டும் உறுதிபடுத்துவதற்கான நாளாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.       

உலகின் குறிப்பிட்ட சில அரிய வகை வன உயிரினங்களின் தாயகமாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். உலகின் மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஒற்றைக்கொம்பு காண்டாமிருகமும், ஆசிய வகை யானைகளும் பெரும் எண்ணிக்கையில் உள்ளதாக அவர் கூறினார். கம்பீரமான ஆசிய சிங்கங்கள் வாழும் ஒரே பகுதி இந்தியா என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வன உயிரின பாதுகாப்பிற்காக மத்திய அரசு எண்ணற்ற முயற்சிகளை மேற்கொள்வதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். மற்ற நாடுகளுடன் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், நிறுவப்பட்ட சர்வதேச புலிகள் கூட்டமைப்பு இதில் அடங்கும். இந்திய கான மயில் பறவைகள், கரியல் வகை முதலைகளைப் பாதுகாத்தல் மற்றும் சிறுத்தைகளின் இடமாற்றம் ஆகிய முன்முயற்சிகள் இதில் அடங்கும்.

இந்தியாவின் கலாச்சார நெறிமுறைகளை வலியுறுத்தியுள்ள பிரதமர், நமது வேதங்கள் அனைத்து உயிரினங்களின் நலனுக்காக பிரார்த்திப்பதாகவும், வன உயிரின பாதுகாப்பு உணர்வுக்கு ஊக்கமளிப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்த ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

“निर्वनो वध्यते व्याघ्रो निर्व्याघ्रं छिद्यते वनम्। तस्माद् व्याघ्रो वनं रक्षेद् वनं व्याघ्रं च पालयेत्॥”

வனங்கள் இன்றி புலிகள் அழிகின்றன. புலிகள் இல்லாமல் வனங்கள் அழிகின்றன என்று ஸ்லோகம் கூறுகிறது. அதனால் புலிகள் வனத்தைப் பாதுகாக்கின்றன. வனங்கள் புலிகளைப் பாதுகாக்கின்றன என்பது இயற்கையின் ஆழமான ஒன்றையொன்று சார்ந்திருத்தலை சுட்டிக்காட்டுகிறது. 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

“உலக வன உயிரின தினம் என்பது நமது பூமியை வளமாக்கி, நமது சுற்றுச்சூழல் அமைப்புகளை நீடிக்கச் செய்யும் மகத்துவமிக்க வன வன உயிரினங்களின் பன்முகத்தன்மையை கொண்டாடுவது என்பதாகும். வன உயிரின பாதுகாப்பிற்காக செயல்படும் அனைவரையும் அங்கீகரிப்பதையும், அவை தொடர்ந்து செழிக்க பாதுகாப்பு, நீடித்த நடைமுறைகள் மற்றும் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிபாட்டை மீண்டும் உறுதிபடுத்துவதற்கான நாளாகும். பல்வேறு அரிய வகை வன உயிரினங்களின் தாயகமாக இந்தியா திகழ்கிறது. உலகின் மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் உள்ளது. நமது நாட்டில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகமும், ஆசிய வகை யானைகளும் பெரும் எண்ணிக்கையில் உள்ளது. கம்பீரமான ஆசிய சிங்கங்கள் வாழும் ஒரே பகுதி இந்தியா.”

“வன உயிரின பாதுகாப்பிற்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மற்ற நாடுகளுடன் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், நிறுவப்பட்ட சர்வதேச புலிகள் கூட்டமைப்பு இதில் அடங்கும். இந்திய கான மயில் பறவைகள், கரியல் வகை முதலைகளைப் பாதுகாத்தல் மற்றும் சிறுத்தைகளின் இடமாற்றம் ஆகிய முன்முயற்சிகள் இதில் அடங்கும்.”

 

“आज World Wildlife Day है। हमारे शास्त्रों में सभी जीवों के कल्याण की कामना की गई है। उनसे हमें वन्यजीवों के संरक्षण के साथ-साथ उनके प्रति संवेदनशील होने की प्रेरणा भी मिलती है। उसका एक उदाहरण यह है… निर्वनो वध्यते व्याघ्रो निर्व्याघ्रं छिद्यते वनम्। तस्माद् व्याघ्रो वनं रक्षेद् वनं व्याघ्रं च पालयेत्॥”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi Praises Farmers For Taking India's Rich Mango Heritage To Global Markets

Media Coverage

PM Modi Praises Farmers For Taking India's Rich Mango Heritage To Global Markets
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam highlighting the virtues of firm resolve, self-control, and wisdom
June 02, 2026

Prime Minister Shri Narendra Modi today shared a Sanskrit Subhashitam, observing that firm resolve and self-control are the powers that make even the most difficult paths easy. Shri Modi highlighted that today, our youth are continuously engaged in nation-building with this very resolve.

The Prime Minister posted on X:

"दृढ़ निश्चय और आत्म-संयम वह शक्ति है, जो कठिन से कठिन राह को भी आसान बना देती है। आज हमारे युवा साथी इसी संकल्प के साथ राष्ट्र निर्माण में निरंतर जुटे हुए हैं।

निश्चित्य यः प्रक्रमते
नान्तर्वसति कर्मणः।

अबन्ध्यकालो वश्यात्मा
स वै पण्डित उच्यते॥"

A person who begins a task after careful deliberation and with firm resolve, who never leaves it unfinished, who uses time wisely and who maintains complete control over their senses, such a person alone is truly wise.