புதுதில்லியில் ரோஹினியில் அக்டோபர் 31 அன்று பிற்பகல் 2.45 மணியளவில் நடைபெறும் சர்வதேச ஆரிய உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். மகரிஷி தயானந்த் சரஸ்வதியின் 200-வது பிறந்த தினம், ஆரிய சமாஜின் 150 ஆண்டு கால சமூக சேவை ஆகிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
இந்த உச்சிமாநாடு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆர்ய சமாஜ் பிரிவுகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும். இது மகரிஷி தயானந்தரின் சீர்திருத்தக் கொள்கைகளின் உலகளாவிய வெளிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. கல்வி, சமூக சீர்திருத்தம் மற்றும் ஆன்மீக மேம்பாட்டில் ஆர்ய சமாஜின் மாற்றத்தக்க பயணத்தை வெளிப்படுத்தும் "சேவையின் 150 பொற்கால ஆண்டுகள்" என்ற தலைப்பில் கண்காட்சியும் நடைபெறுகிறது.
மகரிஷி தயானந்த சரஸ்வதியின் சீர்திருத்தவாத மற்றும் கல்வி சார்ந்த பாரம்பரியத்தை கௌரவித்தல், கல்வி, சமூக சீர்திருத்தம் மற்றும் நாட்டைக் கட்டமைப்பதில் ஆர்ய சமாஜின் 150 ஆண்டுகால சேவையைக் கொண்டாடுதல் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 உடன் இணைந்து வேதக் கொள்கைகள் மற்றும் சுதேசி மதிப்புகள் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதை இந்த உச்சிமாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.


