பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 17 அன்று மும்பைக்குச் சென்று பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மேக்ரோனைச் சந்திப்பார்.
இந்தியா நடத்தும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் பங்கேற்கவும், மும்பையில் பிரதமருடன் இருதரப்பு உச்சிமாநாட்டை நடத்தவும் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், பிப்ரவரி 17 முதல் 19 வரை இந்தியாவின் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இது அதிபர் மேக்ரோனின் இந்தியாவிற்கான நான்காவது பயணம் ஆகிம். அவர் மும்பை வருவது முதல் முறை ஆகும்.
பிப்ரவரி 17 அன்று பிற்பகல் 3:15 மணியளவில், இரு தலைவர்களும் மும்பையின் லோக் பவனில் இருதரப்பு பேச்சுக்களை மேற்கொள்வார்கள். இந்தச் சந்திப்பின் போது, இந்தியா-பிரான்ஸ் உத்திசார் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர்கள் ஆய்வு செய்வார்கள். கூட்டாண்மையை உறுதிப்படுத்துவது மற்றும் புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளுக்கு அதை மேலும் பன்முகப்படுத்துவது குறித்து அவர்களது விவாதம் கவனம் செலுத்தும். பிரதமர் மோடியும் அதிபர் மக்ரோனும் பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
மாலை 5:15 மணியளவில், இரு தலைவர்களும் 2026 -ம் ஆண்டு இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டைத் தொடங்கி வைத்து, இரு நாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள், புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற கண்டுபிடிப்பாளர்களின் கூட்டத்தில் உரையாற்றுவார்கள்.


