புனித நகரமான பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒற்றுமையின் பிரம்மாண்டமான மகா யக்ஞம் நிறைவடைந்துள்ளது. ஒரு தேசத்தின் மனசாட்சி விழிப்படையும் போது, பல நூற்றாண்டு கால அடிமை மனோபாவ தழைகளை தகர்த்து சுதந்திரம் பெறும்போது அது புதுப்பிக்கப்பட்ட சக்தியின் தூய காற்றை சுதந்திரமாக சுவாசிக்கிறது. இதன் பயன் ஜனவரி 13 முதல் பிரயாக்ராஜில் நடைபெற்ற ஒற்றுமையின் மகா கும்பமேளா கண் கூடாக தெரிந்தது.

அயோத்தியில் 2024 ஜனவரி 22 அன்று ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்தபோது, தெய்வ பக்தி மற்றும் தேசபக்தி பற்றி நான் பேசினேன். பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின்போது கடவுள்கள், பெண் தெய்வங்கள், துறவிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என வாழ்க்கையின் அனைத்துத் தரப்பினரும் ஒன்று கூடினர். இதில் தேசத்தின் மனசாட்சி விழிப்புற்றதை நாம் கண்டோம். இதுதான் ஒற்றுமையின் மகா கும்பமேளா. இந்த புனிதமான விழாவின் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 140 கோடி இந்தியர்களின் உணர்வுகள் ஒன்று சேர்ந்தன.

இந்தப் புனிதமான பிரயாக்ராஜ் அருகே உள்ளது ஒற்றுமை, நல்லிணக்கம், அன்பு ஆகியவற்றின் புனித பூமியான ஷ்ரிங்வெர்பூர். இது பிரபு ஸ்ரீராமரும், நிஷாத்ராஜூம் சந்தித்த இடமாகும். இவர்களின் சந்திப்பு பக்தி, நல்லெண்ணம் ஆகியவற்றின் சங்கமத்தை அடையாளப்படுத்துகிறது. இன்றும் கூட அதே உணர்வுடன் பிரயாக்ராஜ் நமக்கு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

45 நாட்களாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தை நோக்கி வருவதை நான் கண்ணுற்றேன். இந்த சங்கமத்தில் உணர்வலைகள் எழுந்தன. அனைத்து பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது என்ற ஒரே நோக்கத்துடன் வந்தனர். அனைத்து யாத்ரீகர்களின் ஆர்வம், சக்தி, நம்பிக்கை ஆகியவற்றில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவற்றின் புனித சங்கமம் நிறைந்திருந்தது.

நவீன நிர்வாக தொழில்முறையாளர்கள், திட்டமிடுவோர், கொள்கை வகுக்கும் நிபுணர்கள் ஆகியோருக்கு ஆய்வுப் பொருளாக பிரயாக்ராஜின் மகா கும்பமேளா உள்ளது. இதற்கு நிகரானது அல்லது உதாரணம் உலகில் வேறெங்கும் இல்லை.

பிரயாக்ராஜில் உள்ள சங்கமித்த நதிகளின் கரைகளில் கோடிக்கணக்கான மக்கள் எவ்வாறு திரண்டனர் என்பதை உலகம் வியப்புடன் பார்த்தது. இவர்களுக்கு முறைபடியான அழைப்புகள் இல்லை, எப்போது செல்ல வேண்டும் என்பதற்கு முன்கூட்டிய தகவல் இல்லை. மேலும் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த விருப்பத்துடன் மகா கும்பமேளாவுக்கு புறப்பட்டனர். புனித நதிகளில் நீராடுவதில் பேரின்பத்தை உணர்ந்தனர்.

புனித நீராடலுக்குப் பின் அவர்களின் முகங்களில் வெளிப்பட்ட ஆனந்தத்தையும், திருப்தியையும் என்னால் மறக்க இயலாது. பெண்கள், முதியவர்கள், நமது மாற்றுத் திறனாளி சகோதர, சகோதரிகள் அனைவரும் திரிவேணி சங்கமத்தை அடைவதற்கான வழியை கண்டறிந்தனர்.

குறிப்பாக, இந்தியாவின் இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்றதை காண்பது எனக்கு மனநெகிழ்வை ஏற்படுத்தியது. இந்தியாவின் இளைஞர்கள் நமது புகழ் பெற்ற கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற ஆழமான செய்தியை மகா கும்பமேளாவில் இளம் தலைமுறையினரின் பங்கேற்பு கொண்டு சென்றது. இதனை பாதுகாப்பது தங்களின் பொறுப்பு என புரிந்து கொண்டுள்ள அவர்கள், அதனை முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளனர்.

மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் வருகை தந்த எண்ணற்ற மக்கள் ஐயத்திற்கு இடமின்றி புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். நேரடியாக வருகை தந்தவர்கள் தவிர பிரயாக்ராஜூக்கு வர இயலாத கோடிக்கணக்கான மக்களும் உணர்வுபூர்வமாக இதில் இணைந்துள்ளனர். யாத்ரீகர்களால் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட புனித நீர் லட்சக்கணக்கானவர்களின் ஆன்மீக இன்பத்தின் ஆதாரமாக மாறியுள்ளது. மகா கும்பமேளாவிலிருந்து வீடு திரும்பிய பலர், அவர்களின் கிராமங்களில் பெருமதிப்பைப் பெற்றனர். சமூகத்தால் கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக நடைபெற்றவை முன்னெப்போதும் காணப்படாதவை என்பதோடு வரவிருக்கும் பல நூற்றாண்டுகளுக்கு அடித்தளம் அமைத்துள்ளன.

பிரயாக்ராஜூக்கு இவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என்பதை எவரும் கற்பனை செய்யவில்லை. கும்பமேளாவின் முந்தைய அனுபவங்கள் அடிப்படையில் பக்தர்கள் வருகையை நிர்வாகம் மதிப்பீடு செய்தது.

ஒற்றுமையின் மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை அமெரிக்க மக்கள் தொகையை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும்.

கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆர்வமிக்க பங்களிப்பை ஆன்மீக அறிஞர்கள் பகுப்பாய்வு செய்தால், இந்தியா அதன் பாரம்பரியத்தில் பெருமிதம் கொண்டிருப்பதையும் புதிய சக்தியுடன் இப்போது முன்னேறி வருவதையும் அறிவார்கள். இது புதிய சகாப்தத்தின் விடியல் என்று நான் நம்புகிறேன். இது புதிய இந்தியாவின் எதிர்காலத்தை பதிவு செய்யும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் தேசிய மனசாட்சியை மகா கும்பமேளா வலுப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பூர்ண கும்பமேளாவும் சமூகத்தில் அவர்களின் காலகட்டத்தில் திரண்ட ஞானிகள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் பற்றி அறிந்துள்ளனர். அவர்களின் கருத்துக்கள் தேசத்திற்கும், சமூகத்திற்கும் புதிய திசை வழியை காட்டியுள்ளது. ஒவ்வொரு ஆறு ஆண்டுகளிலும் அர்த் கும்பமேளாவின்போது இந்த சிந்தனைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 144 ஆண்டுகளில் 12 பூர்ண கும்பமேளாக்கள் வந்தபின் வழக்கொழிந்த பாரம்பரியங்கள் கைவிடப்படுகின்றன. புதிய சிந்தனைகள் ஏற்கப்படுகின்றன. காலத்திற்கு ஏற்ப புதிய பாரம்பரியங்கள் உருவாக்கப்படுகின்றன.

144 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளாவில் நமது ஞானிகள் மீண்டும் ஒருமுறை இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் என்ற புதிய செய்தியை நமக்கு தந்துள்ளனர். அந்த செய்தி வளர்ச்சியடைந்த இந்தியா – விக்சித் பாரத்.

இந்த ஒற்றுமையின் மகா கும்பமேளாவில், ஏழை அல்லது பணக்காரர், இளையோர் அல்லது முதியோர், கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லது நகரத்தைச் சேர்ந்தவர், இந்தியாவை சேர்ந்தவர் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவர், கிழக்கை சேர்ந்தவர் அல்லது மேற்கை சேர்ந்தவர், வடக்கை சேர்ந்தவர் அல்லது தெற்கை சேர்ந்தவர் என்ற பாகுபாடும் சாதி, மதம், சித்தாந்தம் என்ற பாகுபாடும் இல்லாமல் அனைத்து யாத்ரீகர்களும் ஒன்று சேர்ந்தனர். கோடிக்கணக்கான மக்களிடம் நம்பிக்கையை நிறைத்துள்ள ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற தொலைநோக்கின் உருவகமாக இது இருந்தது. இப்போது இதே உணர்வுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் இயக்கத்திற்காக நாம் ஒன்றுபட வேண்டும்.

ஒரு சம்பவத்தை நான் நினைவுகூர்கிறேன். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு சிறுவனாக தனது தாய் யசோதாவுக்கு ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் தனது வாயில் காண்பித்தார். அதே போல் இந்த மகா கும்பமேளாவில் இந்தியாவின் கூட்டு பலத்தின் மொத்த ஆற்றலை இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள மக்கள் கண்டனர். இந்த தன்னம்பிக்கையுடனும், வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதை நோக்கிய அர்ப்பணிப்புடனும் இப்போது நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

முன்னதாக பக்தி இயக்கத்தின் ஞானிகள் நாடு முழுவதும் உள்ள நமது கூட்டு தீர்மானத்தின் பலத்தை கண்டறிந்து ஊக்கப்படுத்தினர். சுவாமி விவேகானந்தரில் இருந்து ஸ்ரீ அரவிந்தர் வரை ஒவ்வொரு மகா சிந்தனையாளரும் நமது கூட்டு தீர்மானத்தின் சக்தியை நமக்கு நினைவுபடுத்தியுள்ளனர். மகாத்மா காந்தியும் கூட, விடுதலை இயக்கத்தின் போது இதனை பரீட்சித்து பார்த்தார். சுதந்திரத்திற்குப் பின் இந்த கூட்டு பலம் சரியாக அங்கீகரிக்கப்பட்டு அனைவரின் நல்வாழ்வை அதிகரிப்பதை நோக்கி பயன்படுத்தப்பட்டிருந்தால் புதிய சுதந்திர தேசத்திற்கான மகத்தான சக்தியாக அது மாறியிருக்கும். துரதிருஷ்டவசமாக ஏற்கனவே இது செய்யப்படவில்லை. ஆனால் இப்போது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு மக்களின் கூட்டு சக்தி ஒன்று திரண்டு வருவதைக் காண நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.

வேதங்கள் முதல் விவேகானந்தர் வரை, தொன்மையான நூல்கள் முதல் நவீன செயற்கைக்கோள்கள் வரை இந்தியாவின் மகத்தான பாரம்பரியங்கள் இந்த தேசத்தை வடிவமைத்துள்ளன. ஒரு குடிமகனாக, நமது மூதாதையர்கள் மற்றும் ஞானிகளின் நினைவுகளிலிருந்து புதிய ஊக்கம் பெற நான் பிரார்த்திக்கிறேன். இந்த ஒற்றுமையின் மகா கும்பமேளா புதிய தீர்மானங்களுடன் முன்னோக்கிச் செல்ல நமக்கு உதவட்டும். ஒற்றுமை என்பதை நமது வழிகாட்டும் கோட்பாடாக மாற்றுவோம். தேசத்திற்கான சேவை, தெய்வத்திற்கான சேவை என்ற புரிதலுடன் நாம் பணியாற்றுவோம்.

காசியில் எனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, “அன்னை கங்கை என்னை அழைத்தாள்” என்று நான் கூறியிருந்தேன். இது வெறும் உணர்ச்சிபூர்வமானதல்ல. நமது புனித நதிகளின் தூய்மையை நோக்கிய பொறுப்புக்கான அழைப்பாகும். பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமத்தில் நின்றபோது எனது தீர்மானம் மேலும் வலுவடைந்தது. நமது நதிகளின் தூய்மை, நமது சொந்த வாழ்க்கையோடு ஆழமான தொடர்புடையது. நமக்கு வாழ்க்கையை தரும் அன்னையர் என்ற முறையில் சிறியதோ, பெரியதோ நமது நதிகளை கொண்டாடுவது நமது பொறுப்பாகும். நமது நதிகளின் தூய்மைக்காக பணியாற்ற இந்த மகா கும்பமேளா நமக்கு ஊக்கமளித்துள்ளது.

இவ்வளவு பெரிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வது எளிதான பணியல்ல என்பதை நான் அறிவேன். எங்களின் பக்தியில் ஏதாவது குறைபாடு இருந்தால் எங்களை மன்னியுங்கள் என்று அன்னை கங்கை, அன்னை யமுனை, அன்னை சரஸ்வதியிடம் நான் பிரார்த்திக்கிறேன். தெய்வீகத்தின் உருவமாக மக்களை நான் காண்கிறேன். அவர்களுக்கு சேவை செய்யும் எங்களின் முயற்சிகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் மக்களின் மன்னிப்பையும் நான் கோருகிறேன்.

பக்தி உணர்வோடு கோடிக்கணக்கான மக்கள் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சேவை செய்வதும் ஒரு பொறுப்பாகும் என்ற பக்தி உணர்வோடு அது மேற்கொள்ளப்பட்டது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் யோகி அவர்களின் தலைமையின் கீழ், ஒற்றுமையின் மகா கும்பமேளாவை வெற்றிகரமாக்க நிர்வாகமும், மக்களும் ஒருங்கிணைந்து பாடுபட்டனர் என்று நான் பெருமிதத்துடன் கூற முடியும். மாநில அரசாக இருப்பினும், மத்திய அரசாக இருப்பினும் ஆட்சியாளர்களோ, நிர்வாகிகளோ அவற்றில் இல்லை. மாறாக ஒவ்வொருவரும் அர்ப்பணிக்கப்பட்ட சேவகர்கள். துப்புரவு தொழிலாளர்கள், காவல் துறையினர், படகோட்டுநர், ஓட்டுநர், மக்களுக்கு உணவு வழங்குவோர் என அனைவரும் ஓய்வின்றி உழைத்தனர். பல சிரமங்களை எதிர்கொண்ட போதும் திறந்த மனதுடன் யாத்ரீகர்கள் பிரயாக்ராஜ் மக்களால் வரவேற்கப்பட்டது ஊக்கமளிப்பதாக இருந்தது. அவர்களுக்கும், உத்தரப்பிரதேச மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தின் ஊசலாட்டமில்லாத நம்பிக்கையை நான் எப்போதும் கொண்டிருக்கிறேன். மகா கும்பமேளாவை காணும் போது எனது நம்பிக்கை பலமடங்கு வலுப்பட்டுள்ளது.

140 கோடி இந்தியர்கள் ஒற்றுமையின் மகா கும்பமேளாவை உலகளாவிய நிகழ்வாக மாற்றியிருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது. நமது மக்களின் அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் முயற்சிகளால் நெகிழ்ந்துள்ள நான் விரைவில் 12 ஜோதிர் லிங்கங்களில் முதலாவதான ஸ்ரீ சோம்நாத் ஜோதிர் லிங்கத்தை தரிசிக்க உள்ளேன். அப்போது இந்த கூட்டான தேசிய முயற்சிகளின் பலன்களை அவருக்கு காணிக்கையாக்கி அனைத்து இந்தியர்களுக்கும் பிரார்த்தனை செய்ய உள்ளேன்.

நேரடி பங்கேற்பு வடிவத்தில் மகா கும்பமேளா மகா சிவராத்திரி அன்று வெற்றிகரமாக நிறைவடைந்த போதும், கங்கையின் நித்திய நீரோட்டம் போல் மகா கும்பமேளா ஏற்படுத்திய ஆன்மீக பலம், தேசிய மனசாட்சி, ஒற்றுமையின் விழிப்புணர்வு வரும் தலைமுறைகளுக்காக தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's fertiliser exports rise 52% in three years from FY24 to FY26

Media Coverage

India's fertiliser exports rise 52% in three years from FY24 to FY26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
இந்தியாவின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை
July 06, 2026

தேசிய உணர்வு மற்றும் சுயநலமற்ற சேவை ஆகிய கொள்கைகளைப் போற்றிப் பாதுகாக்கும் மக்களுக்கு ஜூலை 6-ம் தேதியான இன்று ஒரு சிறப்பு வாய்ந்த நாளாகும். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளை நாம் இன்று கொண்டாடுகிறோம். பாரத அன்னை மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுக்கு காலத்தால் அழியாத ஒரு முன்னுதாரணமாக அவரது வாழ்க்கை திகழ்கிறது. நவீன இந்தியாவில், அறிவுத்திறன், பொதுச் சேவை மற்றும் தார்மீக உறுதிப்பாடு ஆகியவற்றின் மிகச்சிறந்த சங்கமமாகத் திகழ்ந்த தலைவர்களில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு நிகரானவர்கள் மிகச் சிலரே.

இளம் வயது சியாமா பிரசாத், பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கையை உறுதிசெய்யக்கூடிய சூழலில் பிறந்தார். அவரது தந்தையான சர் அசுதோஷ் முகர்ஜி, அக்காலத்தின் மிகச்சிறந்த கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். விதி அவருக்குச் சலுகைகள் நிறைந்த ஒரு பாதையை அமைத்துத் தந்திருந்த போதிலும், அவரது மனசாட்சி, அவரை, தியாகம் மற்றும் தேச சேவையுடன் கூடிய பாதையை நோக்கி வழிநடத்தியது. காலனித்துவம், வகுப்புவாதம், மனிதாபிமானச் சவால்கள் போன்று அக்காலக்கட்டத்தில் நிலவிய கொந்தளிப்பான சூழலின் மௌன சாட்சியாக இருக்க முடியாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இத்தகைய வாழ்க்கைப் பயணத்தின்போது, ​​பச்சிளம் குழந்தையையும், பிற்காலத்தில் தனது மனைவியையும் இழந்தது போன்ற ஆழமான தனது தனிப்பட்ட துயரங்களையும் அவர் எதிர்கொண்டார். இருந்தபோதும், இந்தத் துயரங்கள் அவரது உறுதியை மேம்படுத்தியதுடன், சேவை செய்வதற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தின.

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பொதுவாழ்வை எல்லாவற்றிற்கும் மேலாக வரையறுத்த ஒரு கொள்கை உண்டென்றால், அது இந்தியாவின் பிரிக்க முடியாத தன்மையாகத்தான் இருக்க முடியும். இந்தியப் பிரிவினையின் சவாலான சூழலிலும், மேற்கு வங்கம், இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்தப் பகுதியாகத் தொடர்வதை உறுதி செய்வதில் அவர் உறுதியாக இருந்தார். சில ஆண்டுகளுக்குப் பின், அதே உறுதியான கொள்கைதான் அவரை ஜம்மு-காஷ்மீரை நோக்கி ஈர்த்தது. சிறைவாசம், அவரைத் தடுத்து நிறுத்தவில்லை; தனிமைப்படுத்தப்பட்ட சூழலும் அவரது மனவுறுதியை சீர்குலைக்கவில்லை. எண்ணற்ற மக்களின் நலனுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்த டாக்டர் முகர்ஜி, அவர்களிடமிருந்து வெகு தொலைவில், சிறைக்காவலில் இருந்தபோதே திடீரென உயிர்நீத்தார். வரலாற்றில் சில தருணங்களில், ஒரு தனிநபரின் உயிர்த் தியாகம், அரசியலைக் கடந்து தேசத்தின் கூட்டு நினைவில் நீங்கா இடம் பிடித்துவிடுகிறது. டாக்டர் முகர்ஜியின் இறுதிப் பயணமும் அத்தகைய ஒரு தருணமாகத் திகழ்கிறது. தாம் உறுதியாக நம்பிக்கை கொண்டிருந்த ஒரு லட்சியத்திற்காகவே டாக்டர் முகர்ஜி தம் உயிரைத் தியாகம் செய்தார் என்று ஆச்சார்ய வினோபா பாவே குறிப்பிட்டார். பல ஆண்டுகளுக்குப் பின், 2019-ல் அரசியலமைப்பின் 370 மற்றும் 35(ஏ) ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட நிகழ்வு, அவரது தியாகத்திற்குச் செலுத்தப்பட்ட உன்னதமான மரியாதையாக அமைந்தது.

இந்தியாவிற்கும், இந்திய மாண்புகளுக்கும் டாக்டர் முகர்ஜி முன்னுரிமை அளித்தார். அக்காலகட்டத்தின் வழக்கமான சிந்தனைப் போக்குகளுக்கு மாற்றாக அமைந்த நிறுவனங்களை உருவாக்கியும், புதிய நடைமுறைகளை வளர்த்தெடுத்தும், அவர் இதனைச் செயல்படுத்தினார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இளம் துணைவேந்தராக அவர் பொறுப்பேற்றார். தேசப்பற்று மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஆக்கபூர்வமான மாற்றங்களை அவர் தனது தனித்துவமான பாணியில் முன்னெடுத்தார். கல்வியாளர்களின் மாநாடு ஒன்றில் காலந்துகொண்டுப் பேசிய டாக்டர் முகர்ஜி, “எழுத்தர்களையோ, குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களையோ உருவாக்கும் தொழிற்சாலைகளாக மட்டுமே கல்வி நிறுவனங்களைக் கருதுவது தவறு. நகராட்சிகள், மாநில மற்றும் மத்திய சட்டமன்றங்கள் போன்ற சுயாட்சி அமைப்புகளுக்குத் தலைமை தாங்கும் திறனும், அதேவேளையில் நிதி, வணிகம் மற்றும் தொழில் போன்ற பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை வழிநடத்தும் திறனும் கொண்ட மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும்", என்று அற்புதமாக உரையாற்றினார்.

அவரது தலைமையின் கீழ், கல்கத்தா பல்கலைக்கழகம், நூலகக் கட்டமைப்பின் மேம்பாடு, அறிவியல் துறையில் ஆராய்ச்சிகளின் அதிகரிப்பு, தொல்பொருட்கள் குறித்த ஆய்வுகளின் ஊக்குவிப்பு மற்றும் வேளாண்மைப் பாடப்பிரிவுகளின் அறிமுகம் போன்ற தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டது. விளையாட்டு, ஆசிரியர் பயிற்சி மற்றும் மாணவர் நலன் போன்ற துறைகளிலும் அவர் கவனம் செலுத்தினார். மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே பெருமித உணர்வை ஏற்படுத்தும் வகையில், ஜனவரி 24-ஐ பல்கலைக்கழகத்தின் நிறுவன நாளாகக் கொண்டாடும் வழக்கத்தை அவர் தொடங்கினார். பல்கலைக்கழகத்திற்காக ஒரு பாடலை இயற்றித் தருமாறு அவர் குருதேவ் தாகூரையே கேட்டுக்கொண்டார்.

அவரது வாழ்வின் பிற்பகுதியில், 'பாரதிய ஜன சங்கம்' என்ற கட்சியைத் தொடங்க அவர் எடுத்த முடிவை, இந்த மனப்பான்மைக்கு மற்றொரு சான்றாகக் கூறலாம். காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்த அக்காலக்கட்டத்தில், நமது கலாச்சார வேர்களுடன் இணைந்திருந்தவாறே இந்தியாவின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுக்க ஒரு மாற்றுக்குரல் தேவை என்பதற்கான காரணங்கள் இன்னும் வலுவாக இருப்பதாக அவர் கருதினார். அந்தக் கட்சியின் சின்னமாக 'தியா' எனப்படும் அகல் விளக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது, மிகவும் பொருத்தமானதாக அமைந்தது. ஒரு சிறிய அகல் விளக்கு பார்ப்பதற்கு எளிமையானதாகத் தோன்றினாலும், தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் தாண்டி இருளை அகற்றும் வல்லமை அதற்கு உண்டு. கட்சி இயங்கிய காலத்திலும், அதற்குப் பின்னரும் கூட ஜன சங்கம் அதைத்தான் செய்தது.

இந்தியாவின் முதல் தொழில் மற்றும் வழங்கல் துறை அமைச்சராக டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி வகித்த பதவிக்காலம், வளர்ச்சி பற்றிய அவரது கண்ணோட்டம் எவ்வளவு விரிவானதாகவும், மனிதத்தன்மை நிறைந்ததாகவும் இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. புதிதாகச் சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டிற்கு கண்ணியம், வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை மீட்டளிப்பதற்கான ஒரு வழியாகவே அவர் தொழில்துறையைக் கருதினார். செல்வம் உருவாக்குவதையும், மதிப்புக்கூட்டலையும் அவர் பெரிதும் மதித்தார். தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனம், சிந்திரி உரத் தொழிற்சாலை மற்றும் வலுவான தொழில் கொள்கை போன்ற முன்னோடி முன்முயற்சிகள் மூலம் நவீன தொழில்சார் இந்தியாவின் அடித்தளத்தை அமைத்த அதே வேளையில், இந்தியாவின் பாரம்பரிய வலிமைகளும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை அவர் உறுதி செய்தார். கைத்தறித் துறை, குடிசைத் தொழில்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளித் துறைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு அவர் ஒரு உறுதியான ஆதரவாளராகத் திகழ்ந்தார்.

ஒரு தனிப்பட்ட அனுபவத்தை இங்கு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சுயசார்பு என்ற தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் டாக்டர் முகர்ஜி நிறுவிய சிந்திரி ஆலை, பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தது. அந்த ஆலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் வாய்ப்பு எங்கள் அரசிற்குக் கிடைத்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது உண்மையிலேயே மிகவும் சிறப்பான தருணங்களில் ஒன்றாகும்.

நீண்ட காலமாகவே இந்தியாவின் நாகரிக மரபு, உரையாடல்களையும் விவாதங்களையும் போற்றி வந்துள்ளது. டாக்டர் முகர்ஜி, இந்த ஜனநாயக உணர்வின் அடையாளமாகத் திகழ்ந்தார். தொடக்கக் காலங்களில், தேசத்தைக் கட்டமைக்கும் பணி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்று கருதி, அவர் பண்டித நேருவின் அமைச்சரவையில் இணைந்தார். அவர் நேர்மையுடனும் ஆக்கபூர்வமான மனப்பான்மையுடனும் பணியாற்றினார். ஆனால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் வேறுபட்ட அணுகுமுறை தேவை என்று உணர்ந்தபோது, ​​அவர் கண்ணியத்துடன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், நாட்டிற்குத் தேவை என்று தான் நம்பிய அரசியல் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
75 ஆண்டுகளுக்கு முன், பண்டித நேரு கொண்டுவந்த முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், பேச்சுரிமையின் மீதான நேரடித் தாக்குதலாக அமைந்தது. இது குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்களில் டாக்டர் முகர்ஜியும் ஒருவர். காங்கிரஸ் கட்சியால் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை அவர் முழுமையாக உணர்ந்திருந்தார். அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. 75 ஆண்டுகளுக்கு முன் அந்த முதல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தவர்கள்தான், 1975-ல் அவசரநிலையை அமல்படுத்தினர். இதுமட்டுமின்றி, 50 ஆண்டுகளுக்கு முன் 42-வது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து, தாராளவாத ஜனநாயக மாண்புகளின் அடிப்படையையே மீண்டும் தாக்கினர்.

தனது மனிதாபிமானப் பணிகளுக்காகவும் டாக்டர் முகர்ஜி தனித்து விளங்கினார். 1943-ல் வங்காளத்தில் மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, ​​பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்வதில் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். மக்களுக்கு உணவளிப்பதற்கு, பல்வேறு உணவகங்களும், நிவாரண மையங்களும் திறக்கப்படுவதை அவர் உறுதிசெய்தார். ஒருபுறம் மக்களின் துயரநிலை அவரைக் கடும் வேதனைக்குள்ளாக்கியது. மறுபுறம், காலனித்துவ ஆட்சியாளர்களின் உணர்வற்ற செயல்பாடு அவரை மிகுந்த அதிருப்திக்குள்ளாக்கியது. தனது வேதனையை வெளிப்படுத்தும் வகையில் 'பஞ்சஷர் மான்வந்தர்' என்ற நூலையும் அவர் எழுதினார். 1942-ல் மெதினிப்பூரைத் தாக்கிய கடும் புயலுக்குப் பின், இயல்பு நிலையை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பரவலாகப் போற்றப்பட்டன.

கொல்கத்தாவில் உள்ள ஒரு கல்லூரியில் உரையாற்றிய டாக்டர் முகர்ஜி, "நீங்கள் எந்தப் பணியை மேற்கொண்டாலும், அதில் முழு ஈடுபாட்டுடனும், முழுமையாகவும், சிறப்பாகவும் செய்யுங்கள்; அப்பணியை அரைகுறையாகவோ மேற்கொள்ளமலோ விட்டுவிடாதீர்கள். உங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்திச் சிறப்பாகச் செய்து முடிக்கும் வரை மனநிறைவு கொள்ளாதீர்கள்", என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறிவரும் வேளையில், அவர் ஆழமாக நம்பிய வலிமையான, ஒற்றுமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் கருணைமிக்க இந்தியாவை உருவாக்க நாள்தோறும் பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் மிகச்சிறந்த அஞ்சலியாகும். இன்றைய இளைஞர்களைப் பற்றி நான் நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு அதைச் சரியாகச் செய்து முடிப்பார்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.