ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், ஒவ்வொரு இந்தியருக்கும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகவும் தொடர்ந்து பணியாற்றுவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பல பரிமாண வறுமை குறித்து நித்தி ஆயோக் இன்று வெளியிட்ட விவாத அறிக்கை குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். 2005-06 முதல் 2013-14-ம் ஆண்டில் 29.17% ஆக இருந்த #MPI (பல பரிமாண வறுமை குறியீடு) 2022-23-ம் ஆண்டில் 11.28% ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது. இது 17.89% குறைவு என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இதன் விளைவாகக் கடந்த 9 ஆண்டுகளில் 24.82 கோடி மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"மிகவும் ஊக்கமளிக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. நமது பொருளாதாரத்தில் மாறுதலை ஏற்படுத்தும் மாற்றங்களில் கவனம் செலுத்துகிறது. ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.”
Very encouraging, reflecting our commitment towards furthering inclusive growth and focussing on transformative changes to our economy. We will continue to work towards all-round development and to ensure a prosperous future for every Indian. https://t.co/J20mVQbqSA
— Narendra Modi (@narendramodi) January 15, 2024


