“அனைத்து நன்மைகளும் கடைசி நபரை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்வோம். மோடியின் உத்தரவாதம் வாகனம் ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்லும்.”

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக் கலந்துரையாடினார். பிரதமரின் மகளிர் விவசாய  ட்ரோன் மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, தியோகரில் உள்ள எய்ம்ஸில் வரலாற்றுச் சிறப்புமிக்க 10,000 வது மக்கள் மருந்தகத்தையும் பிரதமர் அர்ப்பணித்தார்.

மேலும், நாட்டில் உள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தையும் திரு. மோடி தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்குதல் மற்றும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்துதல் ஆகிய இந்த இரண்டு முன்முயற்சிகளையும் பிரதமர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சுதந்திர தின உரையின் போது அறிவித்தார். அதன்படி இந்த நிகழ்வின் மூலம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வேளாண் கடன் அட்டை திட்டம், பண்ணை இயந்திரங்கள் வங்கித் திட்டம் மற்றும் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டம் போன்ற பல அரசு திட்டங்களின் நன்மைகளைப் பெற்றதாக ரங்பூர் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஜம்மு மாவட்டத்தின் அர்னியாவைச் சேர்ந்த விவசாயி திருமதி பல்வீர் கவுர் பிரதமரிடம் தெரிவித்தார்.

தனது கிராமம் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். வேளாண் கடன் அட்டையை பயன்படுத்தி வாங்கப்பட்ட டிராக்டரின் உரிமையாளராக இருக்கும் அவருக்கு திரு. மோடி பாராட்டு தெரிவித்தார்.

தனது பகுதியின் தரவுகளை விரல் நுனியில் வைத்திருந்ததற்காக பிரதமர் அவரைப் பாராட்டினார், அதற்கு அவர் அடிமட்டத்தில் பணியாற்றவும், பணி விவரங்களை மறந்துவிடக் கூடாது என்பதையும் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்  என்று கூறினார்.

அரசுத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், திருமதி கவுர் அருகிலுள்ள பத்து கிராமங்களுக்குச் சென்று இந்த செய்தியைப் பரப்புமாறு அறிவுறுத்தினார். அனைத்து நன்மைகளும் கடைசி நபரையும் சென்றடையும் என்ற நம்பிக்கையை பிரதமர் சுட்டிக் காட்டினார். வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறிய பிரதமர், தற்போதுள்ள பயனாளிகளின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதையும், இதுவரை நன்மைகளைப் பெறாதவர்களையும் உள்ளடக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'They will not be spared': PM Modi vows action against those behind Pahalgam terror attack

Media Coverage

'They will not be spared': PM Modi vows action against those behind Pahalgam terror attack
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 22, 2025
April 22, 2025

The Nation Celebrates PM Modi’s Vision for a Self-Reliant, Future-Ready India