பகிர்ந்து
 
Comments

அரசியல் நிர்ணய சபையின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது அமர்வு நாளில் தலைசிறந்த அறிஞர்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“இன்றைய தினம், 75 ஆண்டுகளுக்கு முன் நமது அரசியல் நிர்ணய சபை முதன்முறையாகக் கூடிய நாளாகும். இந்திய மக்களுக்கு மதிப்புமிக்க அரசியல் சட்டத்தை வழங்கும் நோக்கத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, பல்வேறு பின்னணிகளுடன், பல வகையான கொள்கைகளுடனும் கூட தலை சிறந்த அறிஞர்கள் ஒன்று கூடினார்கள். இந்த மாமனிதர்களுக்குப் புகழஞ்சலி.

இந்த சபையின் மூத்த உறுப்பினராக இருந்த டாக்டர் சச்சிதானந்த சின்ஹா, அரசியல் நிர்ணய சபையின் முதலாவது அமர்வுக்குத் தலைமை தாங்கினார்.

இவர் ஆச்சாரிய கிருபளானியால் அறிமுகம் செய்யப்பட்டு தலைமையிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

75 ஆண்டுகளுக்கு முன் நமது அரசியல் நிர்ணய சபை முதன்முறையாகக் கூடிய நாளான இன்றைய தினத்தில், இந்த மதிப்புமிகு கூட்ட நடவடிக்கைகள் பற்றியும், இதன் ஒரு பகுதியாக இருந்த தலைசிறந்த அறிஞர்கள் பற்றியும் கூடுதலாக அறிந்து கொள்ளுமாறு இளம் நண்பர்களை நான் வலியுறுத்துகிறேன். இதைச் செய்வதன் மூலம் அறிவுபூர்வமான அனுபவத்தை வளப்படுத்திக் கொள்ளலாம்.”

 

 

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Over 30 mn women farmers registered under PM-KISAN scheme: Govt in LS

Media Coverage

Over 30 mn women farmers registered under PM-KISAN scheme: Govt in LS
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
CEO NXP Semiconductors meets PM
March 30, 2023
பகிர்ந்து
 
Comments

CEO NXP Semiconductors, Mr. Kurt Sievers met the Prime Minister, Shri Narendra Modi.

In reply to a NXP tweet, the Prime Minister tweeted :

"Happy to have met Mr. Kurt Sievers, the CEO of @NXP and discuss the transformative landscape in the world of semiconductors and innovation. India is emerging as a key force in these sectors, powered by our talented youth."