டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.07.2025) அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
டாக்டர் முகர்ஜியின் மகத்தான பங்களிப்புகளை நினைவுகூர்ந்துள்ள திரு நரேந்திர மோடி, நாட்டின் மரியாதை, கண்ணியம், பெருமையைப் பாதுகாக்க அவர் தமது உயிரைத் தியாகம் செய்ததாகக் கூறியுள்ளார். வளர்ந்த, தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் அவரது லட்சியங்களும் கொள்கைகளும் விலைமதிப்பற்றவை என்று திரு நரேந்திர மோடி மேலும் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நாட்டின் தவப் புதல்வர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளில் அவருக்கு மனமார்ந்த அஞ்சலி. நாட்டின் கௌரவத்தையும் பெருமையையும் பாதுகாக்க அவர் தமது உயிரைத் தியாகம் செய்தார். வளர்ந்த, தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் அவரது லட்சியங்களும் கொள்கைகளும் விலைமதிப்பற்றவை."
राष्ट्र के अमर सपूत डॉ. श्यामा प्रसाद मुखर्जी को उनकी जन्म-जयंती पर भावभीनी श्रद्धांजलि। देश की आन-बान और शान की रक्षा के लिए उन्होंने अपने प्राण न्योछावर कर दिए। उनके आदर्श और सिद्धांत विकसित और आत्मनिर्भर भारत के निर्माण में बहुमूल्य हैं। pic.twitter.com/7RzeKDh8m6
— Narendra Modi (@narendramodi) July 6, 2025


