பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு மசாடோ காண்டாவைச் சந்தித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான மாற்றம் எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது எனவும் இந்தப் பயணத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில் பணியாற்றி வருவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"திரு மசாடோ காண்டாவுடன் ஒரு அற்புதமான சந்திப்பு நிகழ்ந்தது. அதில் நாங்கள் பல்வேறு அம்சங்கள் குறித்த கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டோம். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான மாற்றம் எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. இந்தப் பயணத்தில் மேலும் உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்!" @ADBPresident
Had a wonderful meeting with Mr. Masato Kanda, in which we shared perspectives on a wide range of issues. India’s rapid transformation over the last decade has empowered countless people and we are working to add further momentum in this journey!@ADBPresident https://t.co/40TZ9BsrHV
— Narendra Modi (@narendramodi) June 1, 2025


