பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கான்பூரில் சந்தித்தார். "பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்காக நமது வீரம் பொருந்திய ராணுவத்திற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்" என்று திரு. மோடி கூறினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
"பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த நமது கான்பூரின் திருமகன் சுபம் திவேதியின் குடும்பத்தினரை இன்று நான் சந்தித்தேன். பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்காக நமது வலிமைமிக்க ராணுவத்திற்கு அவர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்தனர். அவர்களது இந்த உணர்வு நாட்டு மக்களை ஊக்குவிக்கும்."
पहलगाम के कायराना आतंकी हमले में जान गंवाने वाले हमारे कानपुर के बेटे शुभम द्विवेदी के परिजनों से आज मुलाकात हुई। उन्होंने आतंक के खिलाफ ऑपरेशन सिंदूर के लिए हमारी पराक्रमी सेना का आभार जताया। उनका ये जज्बा देशवासियों को प्रेरित करने वाला है।
— Narendra Modi (@narendramodi) May 30, 2025


