பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (ஜூன் 05, 2026) குஜராத்தின் ஹசீராவில் உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) வளாகத்தை பார்வையிட்டார். அப்போது பல்வேறு துறைகளிலும் அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் கண்டுபிடிப்பு சார்ந்த நடவடிக்கைகளை அவர் நேரில் பார்வையிட்டார்.

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அதிகரிப்பதில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் ஆற்றி வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பிரதமர் பெரிதும் பாராட்டினார்.

இந்த வருகையின் சிறப்பம்சங்களைப் பகிர்ந்து கொண்ட திரு நரேந்திர மோடி, அந்த வளாகத்தின் பொறியியல் துறை சார்ந்த சாதனைகளையும், முன்னேற்றங்களையும் பாராட்டினார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர், “இன்று பிற்பகல், ஹசீராவில் உள்ள எல்&டி வளாகத்திற்குச் சென்றிருந்தேன். பல்வேறு துறைகளில் அவர்கள் மேற்கொண்டுவரும் கண்டுபிடிப்பு சார்ந்த நடவடிக்கைகளை நேரில் கண்டேன். பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அதிகரிப்பதில் எல்&டி நிறுவனத்தின் பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.

This afternoon, went to the L&T complex at Hazira. Witnessed some of their pioneering innovations across different sectors. The role played by L&T in furthering self-reliance in the defence sector is commendable.@larsentoubro pic.twitter.com/FZ6eOhTDXF
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
"Here are some more glimpses from the visit to the L&T complex in Hazira, Gujarat."


Here are some more glimpses from the visit to the L&T complex in Hazira, Gujarat. pic.twitter.com/NZjUq70NlD
— Narendra Modi (@narendramodi) June 5, 2026


