பிரதமர் திரு நரேந்திர மோடியும் கனடா பிரதமர் திரு மார்க் கார்னியும் 2026 ஜூன் 16 அன்று பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் இடையே சந்தித்துப் பேசினர்.
இந்திய-கனடா உறவுகளில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தை இரு பிரதமர்களும் வரவேற்றதுடன், மார்ச் 2026-ல் பிரதமர் திரு கார்னி இந்தியாவுக்கு மேற்கொண்ட வெற்றிகரமான பயணத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் திருப்தி தெரிவித்தனர்.
ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட உத்திசார் கூட்டாண்மையை உருவாக்குவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய தலைவர்கள், இந்திய, கனடா பொருளாதாரங்களுக்கு இடையிலான பரஸ்பர இணைப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மீள்திறன் கொண்ட மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.

இயற்கை எரிவாயு, சமையல் எரிவாயு மற்றும் உலோகவியல் நிலக்கரி தொடர்பான வர்த்தக ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உட்பட, இருதரப்புப் பொருளாதார ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தலைவர்கள் ஆய்வு செய்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்டப் பயணங்கள் பரிமாறப்படுவதில் நிலவும் தொடர்ச்சியான உத்வேகத்தை இரு நாட்டுப் பிரதமர்களும் வரவேற்றனர். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அண்மையில் கனடாவிற்கு மேற்கொண்ட பயணத்தை அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், 2026-ம் ஆண்டில் கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சரின் தலைமையில் இந்தியாவிற்கு வரவுள்ள வர்த்தகக் குழுவின் வருகையையும் ஆவலுடன் எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டனர்.
விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (சிஇபிஏ) தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். மேலும், 2026-ம் ஆண்டிற்குள் இந்தப் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கான தங்கள் கூட்டு நோக்கத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இரு நாடுகளிலும் உள்ள நிறுவனங்களுக்கு இடையே திறன் மேம்பாடு, புத்தாக்கக் கூட்டாண்மைகள் மற்றும் கல்விசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகள் உட்பட, கனடா, இந்தியா இடையே திறமை மற்றும் புத்தாக்க உத்தியின் கீழ் நடைபெற்று வரும் ஒத்துழைப்பையும் தலைவர்கள் குறிப்பிட்டனர்.

பேச்சுவார்த்தை, பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக ரைசினா அமெரிக்காஸ் அமைப்பை உருவாக்குவதாகத் தலைவர்கள் அறிவித்தனர்.
2026-ம் ஆண்டில் கனடாவிற்கு வருகை தருமாறு விடுத்த அழைப்பிற்காகப் பிரதமர் திரு கார்னிக்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார். இந்த வருகைக்கான பரஸ்பரம் வசதியான தேதியைத் தீர்மானிக்க, தூதரகங்கள் வாயிலாகத் தொடர்ந்து இணைந்திருக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
It was a delight to meet Prime Minister Carney on the sidelines of the Evian G7 Summit. In less than a year, it is our fourth meeting, indicating our commitment to strong India-Canada ties. We reviewed the full range of relations between our nations, notably the ground covered… pic.twitter.com/lGSURANBfc
— Narendra Modi (@narendramodi) June 16, 2026
We discussed extensive cooperation in the following pillars:
— Narendra Modi (@narendramodi) June 16, 2026
Trade and economy.
Energy.
Technology.
People-to-people ties.


