The atmosphere of Bengaluru,the environment here, is something quite unique;This city is known worldwide for software and services, but this city has also taken India's cultural identity, Spirituality, and spiritual consciousness to new heights: PM
Seva Paramo Dharma (Service is the supreme duty), is the natural character of our society: PM
Our Swachh Bharat Abhiyan, is not just a government programme, but it has become a natural part of people's lives; Now, it is advancing driven by the strength of the society: PM
The realization of Viksit Bharat will only be possible through such youth, who are mentally calm, who are socially responsible, and who are sensitive towards society: PM

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (10.05.2026) பெங்களூருவில் நடைபெற்ற 'வாழும் கலை' (தி ஆர்ட் ஆஃப் லிவிங்) அமைப்பின் 45-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். இந்நிகழ்வில் பேசிய அவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 70-வது ஆண்டு விழா, வாழும் கலை அமைப்பின் 45-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் ஆகியவை தனித்துவமானவை என்றார்.

 இதுபோன்ற அர்ப்பணிப்புள்ள அமைப்புகளின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.

பெங்களூருவின் தனித்துவமான சூழலைப் பாராட்டிய பிரதமர், இந்த நகரம் மென்பொருள் சேவைகளுக்காக மட்டுமல்லாமல், இந்தியாவின் கலாச்சார அடையாளத்தையும் ஆன்மீக உணர்வையும் உயர்த்துவதிலும் உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது என்பதை எடுத்துரைத்தார். ஆன்மீகத்திற்கும் ஆன்மீக உணர்வுக்கும் கூட பெங்களூரு நகரம் பெயர் பெற்றது என்று திரு நிரந்தர மோடி குறிப்பிட்டார்.

யோகா, தியானம், பிராணாயாமம் ஆகியவை இந்தியாவின் விழுமியங்களின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியாவின் ஆன்மீக விழுமியங்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர் எனவும் இவற்றில் இருந்து இந்தியாவின் பல அமைப்புகள் உத்வேகம் பெற்று வருகின்றன என்றும் திரு நரேந்திர மோடி கூறினார்.

இந்தப் பழங்கால ஆன்மீக விழுமியங்களிலிருந்து உத்வேகம் பெற்று, 45 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 'ஆர்ட் ஆஃப் லிவிங்' என்ற விதையை விதைத்ததாகவும், அது இன்று ஒரு மாபெரும் ஆலமரமாக வளர்ந்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இன்று அது, உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்க்கையைத் தொட்டு, ஆயிரக்கணக்கான கிளைகளைக் கொண்ட ஒரு மாபெரும் ஆலமரமாக நம் கண்முன் நிற்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மொழிகள், மரபுகள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டிய பிரதமர், இந்த அழகான பன்முகத்தன்மைகளை ஒன்றாக இணைப்பது எது என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பினார். தனக்காக வாழாமல், பிறருக்காக வாழ்வதே அதற்கான பதில் என திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிறருக்குச் சேவை செய்வது அறம் என்றும், துன்பம் விளைவிப்பது பாவம் என்றும் அவர் கூறினார். சேவையே இந்திய சமூகத்தின் இயல்பான குணம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் பல ஆன்மீக இயக்கங்கள் மனிதகுல சேவையின் மூலமே தங்களை வெளிப்படுத்தியுள்ளன என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் ஒவ்வொரு முயற்சியிலும் அதே உணர்வு பிரதிபலிப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். ஆர்ட் ஆஃப் லிவிங்கின் பயணத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு தன்னார்வலருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர், அவர்களின் அர்ப்பணிப்பையும் சேவை மனப்பான்மையையும் பாராட்டினார்.

எந்தவொரு இயக்கத்தின் வெற்றிக்கும் சமூக ஈடுபாடு இன்றியமையாதது என்று வலியுறுத்திய பிரதமர், முக்கிய இலக்குகளை அடைவதற்கு சமூக வலிமையை தட்டி எழுப்புவது அடிப்படையானது என்று குறிப்பிட்டார். அரசியல் அமைப்புகளையும் அரசுகளையும் விட சமூகத்திற்கே அதிக சக்தி உண்டு என்றும், தேசத்தைக் கட்டமைப்பதில் சமூகங்கள் தீவிரமாகப் பங்கேற்காவிட்டால் எந்தவொரு நிர்வாகமும் உண்மையாக வெற்றிபெற முடியாது என்றும் தனது நீண்டகால நம்பிக்கையை அவர் சுட்டிக் காட்டினார். தூய்மை இந்தியா இயக்கத்தை ஒரு முன்மாதிரியாகக் குறிப்பிட்ட அவர், ஒரு அரசு முயற்சியாகத் தொடங்கிய இது, மக்களின் வாழ்க்கையின் இயல்பான இழையோடு பின்னிப் பிணைந்து, இப்போது சமூகத்தின் சொந்த உத்வேகத்தின் மூலம் முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் மிகப்பெரிய சவால்களுக்குக் கூட்டுத் தீர்வுகளைக் காண, சமூகத்தின் தீவிர ஈடுபாடு உதவுகிறது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், தனது முயற்சிகளில் சமூகத்தின் பலத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்காக 'ஆர்ட் ஆஃப் லிவிங்' அமைப்பைப் பாராட்டினார். மரம் நடும் இயக்கங்கள், கிராமப்புற மையங்கள், பெண்கள் - பழங்குடியினர் மேம்பாடு, சிறையில் உள்ளவர்களுக்கான மனநல உதவி, என அனைத்திலும் இந்த அமைப்பு பின்பற்றும் சமூக அணுகுமுறையை அவர் பாராட்டினார். இந்த முயற்சிகள் நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கின்றன என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இளைஞர் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதற்காக ஒவ்வொருவரையும் பாராட்டிய பிரதமர், அறிவியல் முன்னேற்றத்தால் உந்தப்படும் இன்றைய விரைவான உலகளாவிய மாற்றங்களை எடுத்துரைத்தார். இந்தியா இந்த மாற்றங்களில் வெறும் பங்கேற்பாளராக மட்டும் இல்லாமல், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, உள்கட்டமைப்பு விரிவாக்கம், புத்தொழில் சூழல் அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் இளைஞர்கள் விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னோடிகளாகத் திகழ்வதோடு, இதுபோன்ற அனைத்து வெற்றிகளுக்கும் பங்களித்து வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார். இந்தச் சாதனைகளுக்காக இந்தியாவின் இளைஞர்களைப் பாராட்டிய பிரதமர், நவீன கால சவால்களுக்குத் தீர்வு காண இளைஞர்களுக்கு உதவிய 'ஆர்ட் ஆஃப் லிவிங்' அமைப்பின் பங்கையும் பாராட்டினார்.

ஆன்மீக நல்வாழ்வு, மனநலம், யோகா, தியானம் ஆகியவை தொடர்பாக செயல்படும் நிறுவனங்கள், பொறுப்புணர்வை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுவதோடு, கலாச்சாரப் புரிதலுக்கான வாய்ப்புகளையும் வழங்குகின்றன என்று அவர் கூறினார். மன அமைதி, சமூகப் பொறுப்பு, சமூக உணர்வு ஆகியவை உள்ள இளைஞர்கள் மூலமாகவே ஒரு வளர்ச்சியடைந்த இந்தியா கட்டமைக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

இயற்கையோடு இணைந்து வாழும் அதே வேளையில், மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் வாழ்வதை ஊக்குவிக்கும் அரசின் 'மிஷன் லைஃப்' (Mission LiFE) எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை அவர் எடுத்துரைத்தார். சமநிலையுடன் வாழும் இந்த வாழ்க்கைமுறையும் ஒரு வாழும் கலையே என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

ஆன்மீக நல்வாழ்வு, மனநலம், யோகா, தியானம் ஆகியவை தொடர்பாக செயல்படும் நிறுவனங்கள், பொறுப்புணர்வை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுவதோடு, கலாச்சாரப் புரிதலுக்கான வாய்ப்புகளையும் வழங்குகின்றன என்று அவர் கூறினார். மன அமைதி, சமூகப் பொறுப்பு, சமூக உணர்வு ஆகியவை உள்ள இளைஞர்கள் மூலமாகவே ஒரு வளர்ச்சியடைந்த இந்தியா கட்டமைக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

இயற்கையோடு இணைந்து வாழும் அதே வேளையில், மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் வாழ்வதை ஊக்குவிக்கும் அரசின் 'மிஷன் லைஃப்' (Mission LiFE) எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை அவர் எடுத்துரைத்தார். சமநிலையுடன் வாழும் இந்த வாழ்க்கைமுறையும் ஒரு வாழும் கலையே என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PMAY-U Nears 1.25 Crore Homes: Top 10 States With The Highest PMAY-U Completion Rates

Media Coverage

PMAY-U Nears 1.25 Crore Homes: Top 10 States With The Highest PMAY-U Completion Rates
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM chairs 52nd PRAGATI Meeting
June 24, 2026
PM reviews four key infrastructure projects worth around ₹30,000 crore spanning four states across Road, Power, Industrial Corridor and Metro Rail sectors
PM emphasises use of PM GatiShakti National Master Plan and timely updation of project, utility and infrastructure data on the portal for efficient planning
PM asks Ministries and State Governments to resolve pending issues in a mission-mode manner and ensure close monitoring
PM reviews TB Mukt Bharat Abhiyan and emphasizes need to leverage latest digital technologies including AI
PM reviews grievances related to Cyber Crime and Digital Arrest and stresses timely action, coordinated response and e-Zero FIR registration mechanism

Prime Minister Shri Narendra Modi chaired the 52nd meeting of PRAGATI, the ICT-enabled, multi-modal platform aimed at fostering Pro-Active Governance and Timely Implementation, by seamlessly integrating efforts of the Central and State Governments, earlier today at Seva Teerth.

During the meeting, the Prime Minister reviewed four critical infrastructure projects across the Road, Power, Industrial Corridor and Metro Rail sectors, covering four States and costing around ₹30,000 crore. These projects, important for economic growth, regional connectivity, industrial development and public welfare, were reviewed with focus on timelines, inter-agency coordination, issue resolution and timely completion.

Prime Minister underlined that delays in infrastructure projects not only lead to cost escalation, but also deprive people and industries of timely benefits. He asked the concerned Ministries and State Governments to resolve pending issues in a mission-mode manner and ensure close monitoring at the highest level.

Prime Minister emphasised the use of PM GatiShakti National Master Plan for efficient planning and timely implementation of infrastructure projects. He also underlined the need for regular and timely updation of project details, utilities, infrastructure layers, clearances and other field-level information on the portal. He further emphasised that the platform must reflect the latest ground situation so that bottlenecks can be identified in advance, inter-agency coordination can be improved and decisions can be taken on the basis of reliable, real-time data.

Prime Minister reviewed TB Mukt Bharat Abhiyan and emphasised the need to leverage latest digital technologies including Artificial Intelligence. He suggested a team of NCC cadets and MY Bharat volunteers, for awareness, patient follow-up and community mobilisation.

Prime Minister also reviewed grievances related to Cyber Crime and Digital Arrest. He expressed concern over the rising misuse of digital platforms to defraud citizens and stressed that such matters require coordinated, sensitive and time-bound handling by all concerned agencies. He noted that citizens should not be made to run from one department or agency to another. He also emphasized the need for clear ownership, faster response, better coordination among law enforcement agencies, banks and digital platforms, and stronger public awareness campaigns.

Prime Minister observed that in cases involving cyber fraud, timely action is crucial to prevent financial loss and restore public confidence. He asked all stakeholders to work in close coordination to strengthen prevention, reporting, investigation and grievance redressal mechanisms. He also emphasised that States should work towards enabling e-Zero FIR mechanisms for faster registration and response in cyber fraud cases.