இந்தியாவின் பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் மாற்றம் தரும் தாக்கம் பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி விவரித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், சமையலுக்கான அத்தியாவசியப் பொருட்கள், புரதச்சத்து நிறைந்தப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி குறைப்பின் மூலம் இந்த சீர்திருத்தங்கள் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு கட்டுப்படியாகும் நிலை மற்றும் உணவு அணுகலை மேம்படுத்துவதில் நேரடியாக பங்களிக்கும்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வு, சீரான ஊட்டச்சத்து, தரமான வாழ்க்கையை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு அரசின் உறுதிபாட்டை வலியுறுத்துகின்ற ஆயுஷ்மான் பாரத், ஊட்டசத்து திட்டம் போன்ற முதன்மை முன்முயற்சிகளுக்கு இந்த நடவடிக்கைகள் உதவியாக இருக்கும்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திருமதி சந்திரா ஆர் ஸ்ரீகாந்த் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், சமையலுக்கான அத்தியாவசியப் பொருட்கள், புரதச்சத்து நிறைந்தப் பொருட்கள் ஆகியவற்றை அதிகம் எளிதாக அணுகுவதற்கு வழிவகுப்பதன் மூலம் ஆரோக்கிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி நடைமுறைகளில் பிரதிபலித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத், ஊட்டசத்து திட்டம் போன்ற முதன்மை முன்முயற்சிகளுடன் இணைந்து இந்த சீர்திருத்தங்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறந்த சுகாதாரம், சீரான ஊட்டச்சத்து, தரமான வாழ்க்கையை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான நமது உறுதிபாட்டை வலுப்படுத்தும்.”
A big push towards health
— Chandra R. Srikanth (@chandrarsrikant) September 3, 2025
More emphasis on proteins
Carbonated drinks, tobacco, cigarettes get the axe
GST on food items, drinks, cooking items ⏬⏬
Graphics via @moneycontrolcom pic.twitter.com/nAT4dnNVpN


