மத்திய அரசு சமர்ப்பித்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்பு, சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கான முன்மொழிவுகளுக்கு மத்திய, மாநில அரசுகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டாக ஒப்புதல் அளித்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது சாதாரண மக்கள், விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு பயனளிக்கும் என்று அவர் கூறியுள்ளார். பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் எனவும், குறிப்பாக சிறு வணிகர்களுக்கும், தொழில்களுக்கும் வணிகம் செய்வதை இது எளிதாக்கும் என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"எனது சுதந்திர தின உரையின் போது, சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான எங்களது நோக்கம் குறித்து நான் பேசியிருந்தேன்.
பொது மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட, பரந்த அளவிலான ஜிஎஸ்டி விகித சீர்திருத்தங்களுக்கும் செயல்முறைகளுக்குமான விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்திருந்தது.
மத்திய அரசு சமர்ப்பித்த ஜிஎஸ்டி விகிதக் குறைப்புக்கும் சீர்திருத்தங்களுக்குமான முன்மொழிவுகளை மத்திய, மாநில அரசுகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில் ( @GST_Council ) கூட்டாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது சாதாரண மக்கள், விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்குப் பெரிதும் பயனளிக்கும்.
பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, அனைவருக்கும், குறிப்பாக சிறு வணிகர்களுக்கும் வணிகங்களுக்கும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதை உறுதி செய்யும்.”
During my Independence Day Speech, I had spoken about our intention to bring the Next-Generation reforms in GST.
— Narendra Modi (@narendramodi) September 3, 2025
The Union Government had prepared a detailed proposal for broad-based GST rate rationalisation and process reforms, aimed at ease of living for the common man and…


