வால்மீகி ஜெயந்தியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பண்டைய காலத்திலிருந்து இந்திய சமூகம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகரிஷி வால்மீகியின் தூய்மையான மற்றும் இலட்சியத்துடன் கூடிய சிந்தனைகளின் தாக்கம் குறித்து திரு மோடி எடுத்துரைத்தார். சமூக நல்லிணக்கத்தில் மகரிஷி வால்மீகியின் போதனைகள் தொடர்ந்து நாட்டிற்கு உத்வேகம் அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"நாட்டு மக்கள் அனைவருக்கும் மகரிஷி வால்மீகி ஜெயந்தி வாழ்த்துகள். அவரது சாத்வீக மற்றும் லட்சியக் கருத்துக்கள் பண்டைய காலத்திலிருந்தே நமது சமூகத்திலும், குடும்பத்திலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சமூக நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அவரது போதனைகள் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது."
सभी देशवासियों को महर्षि वाल्मीकि जयंती की हार्दिक शुभकामनाएं। प्राचीनकाल से ही हमारे समाज और परिवार पर उनके सात्विक और आदर्श विचारों का गहरा प्रभाव रहा है। सामाजिक समरसता पर आधारित उनके वैचारिक प्रकाशपुंज देशवासियों को सदैव आलोकित करते रहेंगे। pic.twitter.com/VJWk5ayJo8
— Narendra Modi (@narendramodi) October 7, 2025


