மருத்துவர்கள் தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். "நமது மருத்துவர்கள் தங்கள் திறமை மற்றும் விடாமுயற்சியால் முத்திரை பதித்துள்ளனர். அவர்களின் இரக்க மனப்பான்மையும் அதேபோன்றதாகும்" என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"மருத்துவர்கள் தினத்தையொட்டி, கடினமாக உழைக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நமது மருத்துவர்கள் தங்கள் திறமை மற்றும் விடாமுயற்சியால் முத்திரை பதித்துள்ளனர். அவர்களின் இரக்க மனப்பான்மையும் அதே போன்றதாகும். அவர்கள் உண்மையிலேயே ஆரோக்கியத்தின் பாதுகாவலர்களாகவும், மனித சமூகத்தின் தூண்களாகவும் திகழ்கின்றனர். இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பு உண்மையிலேயே சிறப்பானது."
Best wishes to all hardworking doctors on #DoctorsDay. Our doctors have made a mark for their dexterity and diligence. Equally notable is their spirit of compassion. They are truly protectors of health and pillars of humanity. Their contribution in strengthening India’s…
— Narendra Modi (@narendramodi) July 1, 2025


