சத் பண்டிகை நிறைவையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் நடைபெற்ற பிரமாண்டமான திருவிழா, இன்று காலை பகவான் சூரியதேவருக்கு அர்க்யா பிரசாதம் அளிப்பதுடன் நிறைவடைந்தது என்று பிரதமர் கூறியுள்ளார். விழாவின் போது, இந்தியாவின் புகழ்பெற்ற சத் பூஜை பாரம்பரியத்தின் தெய்வீக மகிமை காணப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் சத்தி மையாவின் ஆசிகள் அனைவரின் வாழ்க்கையையும் ஒளி மற்றும் மகிழ்ச்சியால் நிரப்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"சத் எனும் மாபெரும் பண்டிகை, இன்று காலை சூரிய பகவானுக்கு பிரார்த்தனைகளுடன் மங்களகரமாக நிறைவடைந்தது. இந்த நான்கு நாள் சடங்கின் போது, நமது மகத்தான பாரம்பரியமான சத் பூஜையின் தெய்வீக வெளிப்பாட்டைக் கண்டோம். அனைத்து பக்தர்களுக்கும், நோன்பு நோற்கும் மக்களுக்கும், இந்தப் புனித விழாவில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! சத்தி மையாவின் எல்லையற்ற ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்க்கையை எப்போதும் ஒளிரச் செய்யட்டும்."
भगवान सूर्यदेव को प्रात:कालीन अर्घ्य के साथ आज महापर्व छठ का शुभ समापन हुआ। चार दिवसीय इस अनुष्ठान के दौरान छठ पूजा की हमारी भव्य परंपरा के दिव्य दर्शन हुए। समस्त व्रतियों और श्रद्धालुओं सहित पावन पर्व का हिस्सा बने अपने सभी परिवारजनों का हृदय से अभिनंदन! छठी मइया की असीम कृपा से…
— Narendra Modi (@narendramodi) October 28, 2025


