ஒடிசா விவசாயி தனது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்தார்

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வரலாற்றுச் சிறப்புமிக்க 10,000ஆ வது மக்கள் மருந்தகத்தைப் பிரதமர் அர்ப்பணித்தார். மேலும், நாட்டில் உள்ள மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 என்பதிலிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தையும் திரு. மோடி தொடங்கி வைத்தார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை வழங்குதல், மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 என்பதிலிருந்து 25,000 ஆக உயர்த்துதல் ஆகிய இந்த இரண்டு முன்முயற்சிகளையும் பிரதமர் இந்த ஆண்டின் தனது சுதந்திர தின உரையின் போது அறிவித்தார். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை இந்த நிகழ்வு குறிக்கிறது.

ஒடிசா மாநிலம் ராய்கர்ஹாவைச் சேர்ந்த விவசாயி பூர்ண சந்த் பெனியாவைப் பிரதமர் 'ஜெய் ஜெகன்நாத்' என்று வரவேற்றார். பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளியான திரு பெனியா, உஜ்வாலா போன்ற திட்டங்களால் தனது வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பதை விவரித்தார். தனது குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் குறித்து கனவு காண்பதில் இப்போது நம்பிக்கை இருப்பதாக அவர் பிரதமரிடம் தெரிவித்தார்.  யாத்திரையுடன் வரும் அதிகாரிகளிடம் அவரது நலனுக்காக மேலும் என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பது குறித்து விசாரிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PLI 2.0: India bets big on making more of the smartphone at home

Media Coverage

PLI 2.0: India bets big on making more of the smartphone at home
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 29, 2026
May 29, 2026

Every Sector, Every Citizen: How PM Modi’s Vision is Transforming India Across All Fronts