வியட்நாமின் ஃபூ குவோக் அருகே, இந்தியர்கள் பயணம் செய்த படகு விபத்துகுள்ளானது குறித்த துயரமான செய்தி அறிந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டுத் தூதரகம், துணைத் தூதரக அதிகாரிகள் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும், இந்திய அதிகாரிகள், வியட்நாம் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியியுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
"வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் அருகே, இந்தியர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானது குறித்த துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் மன வேதனையடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்தியத் தூதரகம், துணைத் தூதரக அதிகாரிகள் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இந்திய அதிகாரிகள் அந்நாட்டு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்."
Extremely saddened to learn about the tragic news of a boat accident involving Indian nationals near Phu Quoc, Vietnam.
— Narendra Modi (@narendramodi) July 11, 2026
My sincere condolences to the families who lost their loved ones. My prayers for the early recovery of the injured survivors.
Our Embassy and Consulate are…


