உலான்பாதர் ஓபன் 2025 இல் நடந்த 3வது தரவரிசை தொடரில் மல்யுத்த வீரர்களின் அற்புதமான செயல்திறனுக்காக அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "தரவரிசை தொடரில் நமது பெண்கள், அவர்களின் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியது, இந்த சாதனையை இன்னும் மறக்கமுடியாததாக ஆக்குகிறது. இந்த சிறந்த செயல்திறன், ஏராளமான வருங்கால விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும்" என்று திரு மோடி கூறினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
"விளையாட்டுத் துறையில் இந்தியாவின் சாதனைகள் தொடர்கின்றன! உலான்பாதர் ஓபன் 2025 இல் நடந்த 3வது தரவரிசை தொடரில் நமது மல்யுத்த வீரர்களின் அற்புதமான செயல்திறனுக்காக அவர்களுக்கு வாழ்த்துகள். 6 தங்கங்கள் உட்பட 21 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். தரவரிசை தொடரில் நமது மகளிர் சக்தி அதன் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியிருப்பது, இந்த சாதனையை இன்னும் மறக்கமுடியாததாக ஆக்குகிறது. இந்த சிறந்த செயல்திறன், ஏராளமான வருங்கால விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும்."
India’s accomplishments in sports continue! Congrats to our wrestlers for their phenomenal performance at the 3rd Ranking Series in the Ulaanbaatar Open 2025, bringing home 21 medals including 6 Golds. Our Nari Shakti has given their best ever performance at the Ranking Series,… pic.twitter.com/dXqjecuQ5Z
— Narendra Modi (@narendramodi) June 2, 2025


