வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் 47-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு திரு டொனால்ட் ஜே. டிரம்ப் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கோண்டார்.
இரு தலைவர்களும் பரஸ்பர நன்மை மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கான தங்கள் பொறுப்புடைமையை மீண்டும் உறுதிப்படுத்தினர். பரந்த அளவிலான இருதரப்பு விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை மற்றும் அதை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள், தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இரு தலைவர்களும் மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனின் நிலைமை உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் உலகளாவிய அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றாகச் செயல்படுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், இருவருக்கும் உகந்த தேதியில் விரைவில் சந்திக்கவும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.