கனடா பிரதமராக திரு மார்க் கார்னே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கும் மற்றும் அவருடைய லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான அசைக்க முடியாத உறுதிப்பாடு, இந்தியாவையும் கனடாவையும் இணைக்கும் மக்களுக்கு இடையேயான துடிப்பான உறவுகள் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"கனடாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு @MarkJCarney மற்றும் லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்தியாவும் கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான துடிப்பான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. நமது கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நமது மக்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்.
Congratulations @MarkJCarney on your election as the Prime Minister of Canada and to the Liberal Party on their victory. India and Canada are bound by shared democratic values, a steadfast commitment to the rule of law, and vibrant people-to-people ties. I look forward to working…
— Narendra Modi (@narendramodi) April 29, 2025


