கனடா பிரதமராக திரு மார்க் கார்னே  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கும்  மற்றும் அவருடைய லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான அசைக்க முடியாத உறுதிப்பாடு, இந்தியாவையும் கனடாவையும் இணைக்கும் மக்களுக்கு இடையேயான துடிப்பான உறவுகள் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

"கனடாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு @MarkJCarney மற்றும் லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்தியாவும் கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான துடிப்பான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. நமது கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நமது மக்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தங்களுடன் பணியாற்றுவதை  நான் எதிர்நோக்கியுள்ளேன்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian economy navigated well external uncertainties: RBI Bulletin

Media Coverage

Indian economy navigated well external uncertainties: RBI Bulletin
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 23, 2026
July 23, 2026

Digital Rails, PLI Jobs & Swift Justice: How PM Modi’s Governance is Rewiring India’s Future