காசி அன்னபூர்ணா கோவில் மூத்த குருக்கள் திரு ராமேஷ்வர் புரி அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
“காசி அன்னபூர்ணா கோவில் மூத்த குருக்கள் திரு ராமேஷ்வர் புரி அவர்களின் மறைவால் மிகவும் துயருற்றேன். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். ஆன்மிக மற்றும் சமூக சேவைகள் பலவற்றை மக்களுக்காக அவர் ஆற்றியுள்ளார். அவரது தொண்டு என்றென்றும் நமக்கு ஊக்கமளிக்கும். ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
काशी अन्नपूर्णा मंदिर के महंत रामेश्वर पुरी जी के देहावसान से अत्यंत दुख हुआ है। उनका जाना समाज के लिए एक अपूरणीय क्षति है। उन्होंने धर्म और अध्यात्म को समाज सेवा से जोड़कर लोगों को सामाजिक कार्यों के लिये निरंतर प्रेरित किया। ॐ शांति !
— Narendra Modi (@narendramodi) July 10, 2021


