ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நிகழ்ந்த விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்: பிரதமர் @narendramodi.”
Pained by the mishap in Jamtara, Jharkhand. My thoughts are with all those who have lost their loved ones. May the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 28, 2024


