உத்திரப்பிரதேசம் கான்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளதோடு, விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
कानपुर में हुई सड़क दुर्घटना अत्यंत दुखद है। इस हादसे में कई लोगों को अपनी जान गंवानी पड़ी है। मैं उनके परिजनों के प्रति अपनी संवेदना व्यक्त करता हूं, साथ ही घायलों के जल्द से जल्द स्वस्थ होने की कामना करता हूं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 8, 2021


