It is a celebration of India's incredible sporting talent and showcases the spirit of athletes from across the country: PM
We consider sports as a key driver for India's holistic development: PM
We are creating more and more opportunities for our athletes so they can enhance their potential to the fullest: PM
India is making a strong push to host the 2036 Olympics: PM
The National Games is more than just a sporting event, It is a great platform to showcase the spirit of 'Ek Bharat, Shreshtha Bharat,’ It is a celebration of India's rich diversity and unity: PM

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர்உத்தராகண்ட் இன்று இளைஞர்களின் சக்தியால் பிரகாசமாக உள்ளது என்றார். பாபா கேதார்நாத்பத்ரிநாத் மற்றும் அன்னை கங்கையின் ஆசீர்வாதத்துடன் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநிலம் உருவான 25-வது ஆண்டு இது என்று குறிப்பிட்ட திரு மோடிநாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் இந்த இளம் மாநிலத்தில் தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தப் பதிப்பில் பல உள்ளூர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு இருப்பதால் 'பசுமை விளையாட்டுகள்என்ற கருப்பொருளில் இங்கு போட்டிகள் நடப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தக் கருப்பொருளைப் பற்றி மேலும் விவரித்த பிரதமர்கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் கூட மின்னணுக் கழிவுகளால் தயாரிக்கப்பட்டவை என்றும்பதக்கம் வென்ற ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரக்கன்று நடப்படும் என்றும்இது ஒரு சிறந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக உத்தராகண்ட் அரசுக்கும்மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

 

நெருப்பினால் தங்கம் தூய்மையாவதைப் போலவிளையாட்டு வீரர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். கேலோ இந்தியா தொடரில் தற்போது பல போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பல புதிய போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பல இளம் விளையாட்டு வீரர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளதாகவும்பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்குவதாகவும் திரு மோடி கூறினார். கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் மாற்றுத் திறனாளிகளின் செயல்திறனை மேம்படுத்தவும்புதிய சாதனைகளை உருவாக்கவும் உதவி செய்தன என்று அவர் குறிப்பிட்டார். அண்மையில் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் லடாக்கில் நடைபெற்றதை நினைவுகூர்ந்த பிரதமர்கடந்த ஆண்டு கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

 

விளையாட்டை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் அரசின் முழு உந்துதலால் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை என்றும்பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய திறமைகளை வெளிக்கொணர தங்கள் தொகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்து வருவதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். வாரணாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரதமர்தமது தொகுதியில் மட்டும்ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 லட்சம் இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்று தெரிவித்தார்.

"இந்தியாவின் முழுமையான வளர்ச்சிக்கு விளையாட்டு ஒரு முக்கிய ஊடகமாகக் கருதப்படுகிறது" என்று கூறிய பிரதமர்ஒரு நாடு விளையாட்டில் சிறந்து விளங்கும்போதுஅதன் நற்பெயர் மேலும் உயரும் என்று குறிப்பிட்டார். எனவேஇந்தியாவின் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் தன்னம்பிக்கையுடன் விளையாட்டு இணைக்கப்படுவதாக அவர் கூறினார்.

 

மீரட்டில் விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் 35,000-க்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இருப்பதையும்அவற்றில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற சூழல் அமைப்புகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் தில்லியில் தனது இல்லத்தில் இந்திய ஒலிம்பிக் குழுவினரை சந்திக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகக் குறிப்பிட்ட பிரதமர்இந்த உரையாடலின் போதுவிளையாட்டு வீரர்களில் ஒருவர் "பிஎம்" என்பதற்கு பிரதம மந்திரி என்பதற்குப் பதிலாக "பரம் மித்ரா" (சிறந்த நண்பர்) என்று மறுவரையறை செய்தாகப் பிரதமர் குறிப்பிட்டார். இந்த நம்பிக்கை தனக்கு சக்தியை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

 

ஹாக்கியின் புகழ்பெற்ற நாட்கள் திரும்பி வருவதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் கோ-கோ அணி சமீபத்தில் உலகக் கோப்பையை வென்றது என்றும்குகேஷ் டி உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்று உலகை ஆச்சரியப்படுத்தினார் என்றும் அவர் கூறினார். கூடுதலாககொனேரு ஹம்பி பெண்கள் உலக விரைவு சதுரங்க சாம்பியன் ஆனார். இந்தியாவில் விளையாட்டு என்பது வெறும் பாடத்திட்டம் சாராத நடவடிக்கைகள் மட்டுமல்லஇளைஞர்கள் விளையாட்டை ஒரு முக்கிய வாழ்க்கைத் தொழிலாக கருதுகின்றனர் என்பதை இந்த வெற்றிகள் எடுத்துக்காட்டுகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.

 

ஹாக்கியின் புகழ்பெற்ற நாட்கள் திரும்பி வருவதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் கோ-கோ அணி சமீபத்தில் உலகக் கோப்பையை வென்றது என்றும்குகேஷ் டி உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்று உலகை ஆச்சரியப்படுத்தினார் என்றும் அவர் கூறினார். கூடுதலாககொனேரு ஹம்பி பெண்கள் உலக விரைவு சதுரங்க சாம்பியன் ஆனார். இந்தியாவில் விளையாட்டு என்பது வெறும் பாடத்திட்டம் சாராத நடவடிக்கைகள் மட்டுமல்லஇளைஞர்கள் விளையாட்டை ஒரு முக்கிய வாழ்க்கைத் தொழிலாக கருதுகின்றனர் என்பதை இந்த வெற்றிகள் எடுத்துக்காட்டுகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.

 

21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என்று போற்றப்படுகிறது என்பதை எடுத்துரைத்த திரு மோடிபாபா கேதார்நாத்திற்கு வருகை தந்த பிறகுஇது உத்தராகண்டின் தசாப்தம் என்று தன்னிச்சையாக உணர்ந்ததாகக் கூறினார். உத்தராகண்ட் மாநிலத்தின் துரிதமான முன்னேற்றம் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'Bharat Innovates' Bridge Between India’s Talented Youth And European Expertise: PM Modi

Media Coverage

'Bharat Innovates' Bridge Between India’s Talented Youth And European Expertise: PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the role of diversity in innovation and entrepreneurship
June 15, 2026

The Prime Minister, Shri Narendra Modi said that in the fields of innovation and entrepreneurship, every individual has a distinct way of thinking and a unique creative vision, and it is this diversity that gives rise to new possibilities. He noted that just as every source of water has a different taste, every talent possesses its own unique identity and contribution. The Prime Minister added that innovation and progress become possible through the convergence of diverse ideas and capabilities.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

“पिण्डे पिण्डे मतिर्भिन्ना कुण्डे कुण्डे नवं पयः।

जातौ जातौ नवाचाराः नवा वाणी मुखे मुखे॥”

The Subhashitam conveys that in the field of innovation and enterprise, each person has a different way of thinking and a unique creative vision, and this diversity gives rise to new possibilities. Just as the taste of water differs from one source to another, every talent has its own distinct identity and contribution. It is through the combination of these different ideas and abilities that innovation and progress become possible.

The Prime Minister wrote on X;

“पिण्डे पिण्डे मतिर्भिन्ना कुण्डे कुण्डे नवं पयः।

जातौ जातौ नवाचाराः नवा वाणी मुखे मुखे॥”