நிலைத்தன்மையை மேம்படுத்தி, நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.08.2025) பாராட்டியுள்ளார்.
பசுமை ஹைட்ரஜன் ஆலையை நிறுவி இருப்பது குறித்து கண்ட்லாவின் தீன்தயாள் துறைமுக ஆணையம் வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இது ஒரு பாராட்டத்தக்க முயற்சி. நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் நிகர-பூஜ்ஜிய தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கும் இது உத்வேகம் அளிக்கும்."
This is a commendable effort, championing sustainability and powering our Net-Zero vision. https://t.co/lmT17VOSBo
— Narendra Modi (@narendramodi) August 3, 2025


