பிரதமர் நரேந்திர மோடி நேற்று (30.07.2025) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசினார்.
இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான இருதரப்பு உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இருதரப்பு ஒத்துழைப்பில் இதுவரை பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். இரு நாட்டு மக்களின் நன்மைக்காக ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த முக்கியத்துவம் அளிப்பது என அவர்கள் உறுதியேற்றனர்.
இந்திய வரலாற்றில் பிரதமராக அதிக காலம் பணியாற்றியவர்களில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வாழ்த்துத் தெரிவித்தார். இந்தியாவுக்கான சேவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து வெற்றிபெற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்திய மக்கள் மீது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் வெளிப்படுத்திய அன்பிற்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்.


