பிரதமர் திரு நரேந்திர மோடி, சஷஸ்திர சீமா பல் படையுடன் தொடர்புடைய அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் நிறுவன தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.பி-யின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, சேவையின் உயர்ந்த மரபுகளைப் பிரதிபலிக்கிறது என்றும், அவர்களின் கடமை உணர்வு தேசத்தின் பாதுகாப்புக்கு ஒரு வலுவான தூணாகத் திகழ்கிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார். சவாலான நிலப்பரப்புகள் முதல் கடினமான செயல்பாட்டுச் சூழல்கள் வரை, எஸ்.எஸ்.பி எப்போதும் விழிப்புடன் நிற்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளர்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
“சஷஸ்திர சீமா பால் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு, இந்த படையின் அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்.எஸ்.பி-யின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, சேவையின் உயர்ந்த மரபுகளைப் பிரதிபலிக்கிறது. அவர்களின் கடமை உணர்வு நமது தேசத்தின் பாதுகாப்புக்கு ஒரு வலுவான தூணாகத் திகழ்கிறது. சவாலான நிலப்பரப்புகள் முதல் கடினமான செயல்பாட்டுச் சூழல்கள் வரை, எஸ்.எஸ்.பி எப்போதும் விழிப்புடன் நிற்கிறது. அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”
On the Raising Day of the Sashastra Seema Bal, I extend my greetings to all personnel associated with this force. SSB’s unwavering dedication reflects the highest traditions of service. Their sense of duty remains a strong pillar of our nation’s safety. From challenging terrains… pic.twitter.com/ic6CEYt3Kw
— Narendra Modi (@narendramodi) December 20, 2025


