புகழ்பெற்ற எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்றவருமான வினோத் குமார் சுக்லாவின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தி இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஞானபீட விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவின் மறைவை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்தி இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். இந்தத் துயரமான நேரத்தில், அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி."
ज्ञानपीठ पुरस्कार से सम्मानित प्रख्यात लेखक विनोद कुमार शुक्ल जी के निधन से अत्यंत दुख हुआ है। हिन्दी साहित्य जगत में अपने अमूल्य योगदान के लिए वे हमेशा स्मरणीय रहेंगे। शोक की इस घड़ी में मेरी संवेदनाएं उनके परिजनों और प्रशंसकों के साथ हैं। ओम शांति।
— Narendra Modi (@narendramodi) December 23, 2025


