நாக்பூர் மற்றும் ஷிரடியை இணைக்கும் சம்ருதி மகாமார்க் முதற்கட்ட நெடுஞ்சாலையைத் திறந்து வைக்கிறார்
நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்- இந்தத் திட்டத்திற்கு 2017ம்ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்
நாக்பூர் மற்றும் பிலாஸ்பூரை இணைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்
சந்திராபூரில் மத்திய பெட்ரோ-ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தையும், ரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்த மத்திய ஆராய்ச்சி மையத்தையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்.
கேவாவில் ரூ.2,870 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மோபா சர்வதேச விமானநிலையத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
9வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவுவிழாவில் உரையாற்றும் பிரதமர், 3 தேசிய ஆயுர்வேத நிறுவனங்களையும் தொடங்கிவைக்கிறார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2022 டிசம்பர் 11ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
காலை 9.30 மணிக்கு நாக்பூர் ரயில் நிலையம் சென்றடையும் பிரதமர், அங்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.
10.45 மணிக்கு நாக்பூர் மற்றும் ஷிரடியை இணைக்கும் சம்ருதி மகாமார்க் முதற்கட்ட நெடுங்சாலையைத் திறந்து வைக்கிறார். 11.45 மணிக்கு நாக்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர், நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
3.15 மணிக்கு கோவா செல்லும் பிரதமர், அங்கு 9-வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவுவிழாவில் உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் 3 தேசிய ஆயுர்வேத நிறுவனங்களையும் அவர் திறந்துவைக்கிறார்.
பின்னர் 5.15 மணிக்கு கோவாவில் மோபா சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் திறந்துவைக்கிறார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2022 டிசம்பர் 11ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

காலை 9.30 மணிக்கு நாக்பூர் ரயில் நிலையம்  சென்றடையும் பிரதமர், அங்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார். 

10 மணிக்கு சுதந்திர பூங்கா மெட்ரோ நிலையத்தில் இருந்து கப்ரி மெட்ரோ நிலையத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அங்கு,  நாக்பூர் மெட்ரோ ரயில் பேஸ் 1-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நாக்பூர் மெட்ரோ ரயிலின் 2ம் கட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.  10.45 மணிக்கு நாக்பூர் மற்றும் ஷிரடியை இணைக்கும்  சம்ருதி மகாமார்க் முதற்கட்ட நெடுங்சாலையைத் திறந்து வைக்கிறார். 11.45 மணிக்கு நாக்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர், நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

11.30 மணிக்கு நாக்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் ரூ.1500 கோடி மதிப்பிலான தேசிய ரயில்வேத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். நாக்பூரில் தேசிய ஒருங்கிணைந்த சுகாதார  நிறுவனத்திற்கு (என்ஐஓ) அடிக்கல் நாட்டுகிறார். இதேபோல் நாக்பூர் நதி மாசுக்குறைப்புத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல், சந்திராபூரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பெட்ரோ-ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பதுடன், ரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது குறித்த மத்திய ஆராய்ச்சி மையத்தையும் திறந்துவைக்கிறார் பிரதமர்.

3.15 மணிக்கு கோவா செல்லும் பிரதமர், அங்கு 9-வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவுவிழாவில் உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் 3 தேசிய ஆயுர்வேத நிறுவனங்களையும் அவர் திறந்துவைக்கிறார்.

பின்னர் 5.15 மணிக்கு கோவாவில்  மோபா சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் திறந்துவைக்கிறார்.

 

பின்னணி:

 

சம்ருதி மகாமார்க் :

 

நாக்பூர் மற்றும் ஷிரடி இடையேயான 520 கிலோ மீட்டர் தொலைவை இணைக்கும்  சம்ருதி மகாமார்க் முதற்கட்ட நெடுங்சாலையைத் திறந்து வைக்கிறார்.

இது நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட சாலை இணைப்பு மற்றும உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பிரதமரின் கண்ணோட்டத்தின்படியே  சம்ருதி மகாமார்க்  அல்லது நாக்பூர்-மும்பை சூப்பர் தொடர்பு விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

 

நாக்பூர் மெட்ரோ:

 

பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நாக்பூர் மெட்ரோ பேஸ்-I, நகர்புறப் போக்குவரத்தில் புரட்சி படைக்கும் மற்றொரு திட்டமாகும். 

 

நாக்பூர் எய்ம்ஸ்:

 

நாடு முழுவதும் சுகாதார வசதிகளை பலப்படுத்தும் பிரதமரின் நிலைப்பாட்டிற்கு  உதாரணமாக அமைக்கப்பட்டுள்ளது நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு பிரதமர் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டினார். இது மத்திய அரசின் பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் கிழ் கட்டப்பட்டது.

 

ரயில் திட்டங்கள் :

 

 நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நாக்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கிவைக்கிறார். 

நாக்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர், நாக்பூர் ரயில் நிலையம் மற்றும் அஜ்னி ரயில் நிலையங்கள் முறையோ, ரூ.590 கோடி, ரூ. 360 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படுகிறது.

 

ஒற்றை  சுகாதார அணுகுமுறை:

 

பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ள தேசிய ஒற்றை  சுகாதார நிறுவனம்,  ஒற்றை  சுகாதார அணுகுமுறையின் கீழ் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் இலக்கின் படி உருவாக்கப்படுகிறது.

ஒற்றை சுகாதார அணுகுமுறை என்பது விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலலின் சுகாதாரத்துடன் மனிதனை இணைப்பது.  அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றும் நோய்களை, ஒற்றை சுகாதார அணுகுமுறையில் கையாளப்படும்.

இந்த நிறுவனம் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது.

 

மோபா சர்வதேச விமானநிலையம், கோவா:

நாடுமுழுவதும் உலகத்தரம் வாய்ப்பு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் கண்ணோட்டத்தின்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  பிரதமர் திறந்துவைக்க உள்ள மொபா சர்வதேச விமானநிலையத்திற்கு, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  இந்த விமான நிலையம் ரூ.2,870 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'Team Bharat' At Davos 2025: How India Wants To Project Vision Of Viksit Bharat By 2047

Media Coverage

'Team Bharat' At Davos 2025: How India Wants To Project Vision Of Viksit Bharat By 2047
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 22, 2025
January 22, 2025

Appreciation for PM Modi for Empowering Women Through Opportunities - A Decade of Beti Bachao Beti Padhao

Citizens Appreciate PM Modi’s Effort to bring Growth in all sectors