2018 ஆகஸ்ட் 23அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி, குஜராத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

வால்சாத் மாவட்டம் ஜூஜ்வா கிராமத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் “அனைவருக்கும் வீடு” என்ற மத்திய அரசின் முக்கியத் திட்டமான பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டப் பயனாளிகள் ஒட்டுமொத்தமாக நடத்தும் புதுமனைப் புகுவிழாவை பிரதமர் பார்வையிடுவார்.

குஜராத் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளைப் பெற்ற பயனாளிகள் 26 மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக புதுமனைப் புகுவிழாவைக் கொண்டாடுவார்கள். தெற்கு குஜராத்தில் உள்ள வால்சாத், நவ்சாரி, தபி, சூரத், டாங்ஸ் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் வால்சாத்தில் கூடுகின்றனர். மற்ற மாவட்டங்களில் கூட்டான புதுமனைப் புகுவிழா ஒன்றிய அளவில் கொண்டாடப்படும். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் வால்சாத்தில் நடைபெறும் முதன்மை நிகழ்வோடு, பொருத்தமான முறையில் காணொலிக் காட்சி மூலம் இணைக்கப்படுவார்கள். இந்த நிகழ்வில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இணைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதே நிகழ்வில் தீன் தயாள் உபாத்யாயா ஊரகத் திறன் மேம்பாட்டுத் திட்டம் முதலமைச்சரின் கிராமோதயா திட்டம் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின்கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பிரதமர் சான்றிதழ்களையும் வேலை உறுதி கடிதங்களையும் வழங்குவார். மகளிர் வங்கி சேவகர்களுக்கு நியமனக் கடிதங்களையும், சிறு வகை ஏடிஎம்-களையும் அவர் வழங்குவார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.

ஜூனாகடில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார். ஜூனாகடில் அரசு மருத்துவமனை: ஜூனாகட் மாநகராட்சியின் 13 திட்டங்கள் கோக்கர்தாவில் பால் பதனத் தொழிற்சாலை ஆகியவையும் இதில் அடங்கும். அங்கு நடைபெறும் கூட்டத்திலும் அவரை உரையாற்றுவார்.

காந்திநகரில் உள்ள குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பிரதமர் பட்டமளிப்பு விழா உரையாற்றுவார். தில்லி திரும்புவதற்குமுன், காந்திநகரில் சோம்நாத் அறக்கட்டளை கூட்டத்திலும் அவர் பங்கேற்பார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian youth are at the forefront of tech-led growth, innovation: PM Modi

Media Coverage

Indian youth are at the forefront of tech-led growth, innovation: PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 14, 2026
June 14, 2026

From Healthcare to Himalayas: PM Modi's Vision Building an Unstoppable India